search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பி.எஸ். VI விதிகளுக்கு பொருந்தும் முதல் மாருதி ஆல்டோ 900 விநியோகம்
    X

    பி.எஸ். VI விதிகளுக்கு பொருந்தும் முதல் மாருதி ஆல்டோ 900 விநியோகம்

    மாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ். VI புகை விதிகளுக்கு பொருந்தும் முதல் ஆல்டோ 800 காரை விநியோகம் செய்தது. #MarutiSuzuki
    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புதிய ஆல்டோ 800 காரை பி.எஸ். VI புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அறிமுகம் செய்தது. பி.எஸ். VI என்ஜின் கொண்ட மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது வாகனமாக ஆல்டோ 800 இருக்கிறது. தற்சமயம் மாருதி நிறுவனம் பி.எஸ். VI என்ஜின் கொண்ட முதல் ஆல்டோ 800 காரை விநியோகம் செய்துள்ளது.

    புத்தம் புதிய ஆல்டோ 800 கார் இந்தியாவில் ஏப்ரல் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய காரின் வெளிப்புறத்தில் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் முன்புறம் மெஷ் கிரில், புதிய பம்ப்பர்கள் மற்றும் ஃபென்டர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. காரின் பக்கவாட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

    காரின் உள்புறம் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற அம்சங்களே இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய ஏ.டி. வென்ட்கள், பாட்டில் வைக்கும் பகுதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. வடிவமைப்பு, லே-அவுட் மற்றும் உள்புற வசதிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.



    புதிய 2019 மாருதி சுசுகி ஆல்டோ 800 கார் 796சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 48 பி.ஹெச்.பி. பவர், 69 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. இது லிட்டருக்கு 22.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி தெரிவித்திருக்கிறது.

    2019 ஆல்டோ 800 மாடலில் ஏ.பி.எஸ்., எ.பி.டி. டிரைவர் சைடு ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கீ-லெஸ் என்ட்ரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய 2019 மாருதி ஆல்டோ 800 விலை இந்தியாவில் 2.94 லட்சத்தில் துவங்கி 3.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை கிடைக்கிறது.

    புதிய ஆல்டோ 800 கார்: கிரானைட் கிரே, செருலியன் புளு, மொஜிடோ கிரீன், அப்டவுன் ரெட், சில்கி சில்வர் மற்றும் சுப்பீரியர் வைட் என ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது. #MarutiSuzuki
    Next Story
    ×