search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பெட்ரோல் வேரியண்ட்டில் களமிறங்கும் மாருதி எஸ் கிராஸ்
    X

    பெட்ரோல் வேரியண்ட்டில் களமிறங்கும் மாருதி எஸ் கிராஸ்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் கார் புதிதாக பெட்ரோல் வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. #MarutiSuzuki



    மாருதி சுசுகி எஸ் கிராஸ் கார் 2017 ஆம் ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் எஸ் கிராஸ் காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருப்பதாகவும், இத்துடன் மாருதி சுசுகி நிறுவனம் பெட்ரோல் வேரியண்ட் ஒன்றையும் உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் மாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜின் சுசுகியின் K15B ரகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதே என்ஜின் மேம்படுத்தப்பட்ட சியாஸ் மற்றும் இரண்டாம் தலைமுறை எர்டிகா காரில் வழங்கப்பட்டிருக்கிறது.



    இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. எஸ் கிராஸ் பெட்ரோல் வேரியண்ட்டில் ஸ்மார்ட் வெஹிகில் ஹைப்ர்ட் பை சுசுகி சிஸ்டம் (SHVS) மற்றும் இரட்டை பேட்டரி அமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. SHVS தொழில்நுட்பம் எஸ் கிராஸ் மைலேஜை அதிகப்படுத்த முடியும். 

    இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. எனினும், இத்துடன் 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்குவதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மாருதி சுசுகி நிறுவனம் 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனை உருவாக்கி வருவது பற்றிய விவரங்கள் வெளியாகி இருந்தது.

    சர்வதேச சந்தையில் எஸ் கிராஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவற்றில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்ட்கள் கிடைக்கிறது. இந்தியாவில் எஸ் கிராஸ் டீசல் வேரியண்ட் விலை ரூ.8.85 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.11.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×