search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    40 நாட்களில் 2400 முன்பதிவு செய்த ஹோன்டா கார்
    X

    40 நாட்களில் 2400 முன்பதிவு செய்த ஹோன்டா கார்

    ஹோன்டா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹோன்டா சிவிக் காரினை வாங்க 40 நாட்களில் சுமார் 2400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCivic



    இந்தியாவில் ஏழு ஆண்டுகளுக்கு பின் புதிய அம்சங்களுடன் ஹோன்டா சிவிக் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்த சிவிக் காரை வாங்க இதுவரை சுமார் 2400 பேர் முன்பதிவு செய்திருப்பதாக ஹோன்டா கார் இந்தியா தெரிவித்துள்ளது.

    முன்பதிவு எண்ணிக்கை குறைவாக காணப்பட்ட நிலையிலும், இவை வெறும் 40 நாட்களுக்குள் நடைபெற்றிருக்கின்றன. புதிய சிவிக் கார் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹோன்டா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது.



    தற்சமயம் உலகம் முழுக்க சுமார் 170 நாடுகளில் ஹோன்டா சிவிக் விற்பனையாகி வருகிறது. இவற்றில் இந்த கார் 10 இடங்களில் மட்டுமே உறபத்தி செய்யப்படுகிறது. பத்து இடங்களஇலும் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை விற்பனை செய்கிறது. கிரேட்டர் நொய்டா ஆலையில் 20 சதவிகிதம் டீசல் வேரியண்ட்டும் 80 சதவிகிதம் பெட்ரோல் வேரியண்ட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய ஹோன்டா சிவிக் மாடலில் 1.8 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 139 பி.ஹெச்.பி. @6500 ஆர்.பி.எம்., 174 என்.எம். டார்க் @4300 ஆர்.பி.எம். வழங்குகிறது. இத்துடன் முதல் முறையாக சிவிக் மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    அந்த வகையில் புதிய சிவிக் மாடலில் 1.6 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம்., 300 என்.எம். டார்க் @2000 ஆர்.பி.எம். வழங்குகிறது. பெட்ரோல் என்ஜின் சி.வி.டி. யூனிட் கொண்டிருக்கும் நிலையில், டீசல் வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
    Next Story
    ×