search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பீஜிங் மோட்டார் விழாவில் கிராண்ட் கமாண்டர் வெளியானது
    X

    பீஜிங் மோட்டார் விழாவில் கிராண்ட் கமாண்டர் வெளியானது

    ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் கமாண்டர் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி கார் பீஜிங் நகரில் நடைபெற்று வரும் மோட்டார் விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    அமெரிக்க கார் தயாரிப்பு நிறுனமான ஜீப் சமீபத்தில் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான கிரான்ட கமாண்டர் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் ஜீப் கிராண்ட் கமாண்டர் எஸ்யுவி சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் விற்பனையாக இருக்கும் கிரான்ட் கமாண்டர், விரைவில் மற்ற சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஜீப் கிராண்ட் கமாண்டர் ரேன்ஜ் ரோவர் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    ஜீப் கிராண்ட் கமாண்டர் முந்தைய கிராண்ட் செரோக்கி மாடலை விட 50மில்லிமீட்டர் நீலமாகவும், 100 மில்லிமீட்டர் குறைவாகவும், 50 மில்லிமீட்டர் மெல்லியதாகவும் உள்ளது. எனினும் உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது. மூன்றடுக்கு இருக்கைகள் மொத்தம் ஏழு பேர் வசதியாக அமர்ந்து செல்ல முடியும்.


    இதன் வடிவமைப்புகள் தற்போதைய கிராண்ட் செரோக்கி மாடலை தழுவியே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும் அதிகப்படியான ஆடம்பர வசதிகள் காருக்கு ஆடம்பர பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. முன்பக்கம் ஏழடுக்கு ஸ்லாட் கிரில், மெல்லிய ராப்-அரவுன்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

    பின்புறம் கிராண்ட் கமாண்டர் மாடலில் மெல்லிய டெயில் லேம்ப், மிக நேர்த்தியான வளைவுகளை கொண்டுள்ளது. புதிய கிராண்ட் கமாண்டர் மாடலில் 2.0 லிட்டர், HEMI டர்போசர்ஜ்டு, 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சம் 230 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

    இதன் டிரான்ஸ்மிஷன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய ஜீப் கிராண்ட் கமாண்டர் இந்திய வருகை குறித்து ஜீப் நிறுவனம் எவ்வித தகவலையும் இதுவரை வழங்கவில்லை.
    Next Story
    ×