search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் வெளியீட்டு தகவல்கள்
    X

    ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் வெளியீட்டு தகவல்கள்

    ஃபோர்டு நிறுவனத்தின் ஃப்ரீஸ்டைல் காம்பேக்ட் எஸ்யுவி இந்தியாவில் அதிகாரப்பூர்வ வெளியீடு மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி இந்தியாவில் ஏப்ரல் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதன் விலை அறிமுக தினத்தன்று அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் விநியோகம் மே மாத வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த கார் ஏப்ரல் 26-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வடிவமைப்பை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் முகப்பு பார்க்க ஃபிகோ போன்றே காட்சியளிக்கிறது. எனினும் புதிய கிரில் வித்தியாச தோற்றம் கொண்டிருக்கிறது. இருபுறங்களிலும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், காரை சுற்றி கிளாஸ்டிக் கிளாடிங், வீல் ஆர்ச், எஸ்யுவி போன்ற அனுபவத்தை வழங்கும்.

    இத்துடன் புதிய மாடலில் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எட்டு வேரியன்ட்களில் கிடைக்கும் ஃப்ரீஸ்டைல் உள்புறம் ஃபோர்டு இகோஸ்போர்ட் போன்று காட்சியளிக்கிறது. இதன் டைட்டானியம் வேரியன்ட் 6.5 இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ஃபோர்டு சின்க் 3.0 வசதி கொண்டுள்ளது. இகு ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டியை வழங்குகிறது.



    ஃப்ரீஸ்டைல் மாடலில் ஃபோர்டின் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே டிராகன் சீரிஸ் இன்ஜின் ஃபிகோ மற்றும் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இவை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    செயல்திறனை பொருத்த வரை இந்த இன்ஜின் 1194சிசி பெட்ரோல் மோட்டார் 95 பிஹெச்பி @6500 ஆர்பிஎம், 120 என்எம் டார்கியூ @4200 ஆர்பிஎம், 1498சிசி மோட்டார் 99 பிஹெச்பி @3750 ஆர்பிஎம், 215 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் ஆட்டோமேடிக் வேரியன்ட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடலில் கீலெஸ் என்ட்ரி, ஒன்-டச்-டவுன் முன்பக்க கண்ணாடிகள், பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் அம்சம், ஓட்டுனர் இருக்கை உயரத்தை மாற்றும் வசதி, ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஃபோர்டு மைகீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஃப்ரீஸ்டைல் மாடலில் ஏபிஎஸ் மற்றும் இபிடி, முன்பக்கம் டூயல் ஏர்பேக், டாப் என்ட் மாடலில் ஆறு ஏர்பேக் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×