search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் மஹேந்திரா எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்
    X

    இந்தியாவில் மஹேந்திரா எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

    மஹேந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மஹேந்திரா நிறுவனம் 2018 எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் மாடலினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்யுவி500 மாடலின் இரண்டாவது ஃபேஸ்லிஃப்ட் மாடல் இது ஆகும்.

    எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வெளிப்புறத்தில் முன்பக்கம் பெரிய கிரில், மேம்படுத்தப்பட்ட ஹெட்லைட், ப்ரோஜெக்டர்கள் மற்றும் டிஆர்எல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பம்ப்பர் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபாக்ஸ் பேஷ் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லைட்களும், புதிய வடிவமைப்பு கொண்ட டெயில்கேட் காரின் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகிறது.

    புதிய எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் மிஸ்டிக் காப்பர் மற்றும் க்ரிம்சன் ரெட் என இருவித நிறங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் கேபின் மேம்படுத்தப்பட்டு புதிய டான் லெதர் சீட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதிகம் மாற்றப்படவில்லை என்றாலும் புதிய மாடலில் ஸ்மார்ட்வாட்ச் ஆப் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.



    இத்துடன் 2.2 லிட்டர் இன்ஜின் 155 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்கியூ 1750-2800 ஆர்பிஎம் செயல்திறன் கொண்டுள்ளது. இந்த மோட்டார் ஆறாம் தலைமுறை eVGT தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன் மைலேஜ் அளவு ARAI மூலம் சான்றளிக்கப்பட்டு லிட்டருக்கு 15.4 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவை அனைத்தும் பிரீமியம் மாடலின் அம்ங்கள் என்ற வகையில், பேஸ் வேரியன்ட் மாடலில் 140 பிஎஸ் வழங்கப்படுகிறது. எனினும் இதன் 2.2 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷன் மாற்றப்படவில்லை. 

    இந்தியாவில் 2018 மஹேந்திரா எக்ஸ்யுவி500 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ.12.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) முதல் துவங்குகிறது. புதிய அப்டேட் மூலம் மஹேந்திரா எக்ஸ்யுவி500 இந்தியாவில் ஜீப் காம்பஸ், ஹூன்டாய் க்ரெட்டா மற்றும் ரெனால்ட் கேப்டூர் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×