search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் இந்தியா வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்
    X

    விரைவில் இந்தியா வரும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்

    ஃபோர்டு இந்தியா நிறுவனம் விரைவில் தனது ஃப்ரீஸ்டைல் மாடலை இந்தியாவில் வெளியிட இருக்கிறது.
    புதுடெல்லி:

    ஃபோர்டு இந்தியா நிறுவனம் விரைவில் ஃப்ரீஸ்டைல் மாடல் காரினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் இந்தியாவின் முதல் காம்பேக்ட் யூடிலிட்டி வாகனமாக (CUV) இருக்கும். புதிய ஃப்ரீஸ்டைல் மாடலுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் லைவ் செய்யப்பட்டுள்ளது. 

    ஃப்ரீஸ்டைல் மாடலின் வலைத்தளத்தில் புதிய வாகனத்தின் அம்சங்கள், வேரியண்ட், உதிரி பாகங்கள் மற்றும் மைலேஜ் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது. 

    ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய டிராகன் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 94.6 பிஹெச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த மாடல் லிட்டருக்கு 19 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டீசல் இன்ஜின் 98.6 பிஹெச்பி பவர் மற்றும் 215 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் லிட்டருக்கு 24.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 



    உள்புறத்தில் ஃப்ரீஸ்டைல் மாடலில் 6.5 இன்ச் சின்க் 3 தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியை வழங்குகிறது. ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் மாடல் நான்கு வித ட்ரிம்கள்: ஆம்பியென்ட், டிரெண்ட், டைட்டானியம், டைட்டானியம் பிளஸ் கிடைக்கிறது. 

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக்ஸ், ஏபிஸ், இபிடி, இன்ஜின் இம்மொபோலைசர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கீலெஸ் என்ட்ரி, அப்ரோச் சென்சார்கள், பெரிமீட்டர் தெஃப்ட் அலாரம், சீட்-பெல்ட் ரிமைன்டர், ஆட்டோமேடிக் ரீலாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ஆம்பியென்ட் ட்ரிம் தவிர மற்ற மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வழங்கப்படுகிறது. இதன் டாப்-எண்ட் மாடலில் ஆக்டிவ் ரோல்-ஓவர் ப்ரோடெக்ஷன், பக்கவாட்டுகளில் கர்டைன் ஏர்பேக் மற்றும் எமர்ஜென்சி அசிஸ்டண்ஸ் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×