search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் வெளியாகும் ஆடி கியூ 8
    X

    விரைவில் வெளியாகும் ஆடி கியூ 8

    ஆடி நிறுவனத்தின் புத்தம் புதிய கியூ 8 எஸ்.யு.வி. இந்திய வெளியீடு குறித்த தகவல்கள் வெளியகி உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய ஆடி திட்டமிட்டிருந்த நிலையில், புதிய ஆடி கியூ 8 சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

    2017 டெட்ராயிட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட கியூ8 கான்செப்ட் மாடல் இந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆடி நிறுவன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவு தலைவர் பீட்டர் மெர்டென்ஸ் அறிவித்துள்ளார்.

    புதிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடல் ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் பிரத்யேக விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சீனாவில் ஆடி கார் தயாரிப்பின் 30-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த கார் அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கார் தயாரிப்பை இரட்டிப்பாக்க முடிவு செய்திருப்பதாக ஆடி தெரிவித்திருக்கிறது.

    மெர்டின்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கியூ8 கூப் போன்ற எஸ்.யு.வி. மாடலாக காட்சியளிக்கிறது. முந்தைய கியூ7 போன்று காட்சியளிக்கும் கியூ8 ஸ்லோவேகியாவில் இயங்கி வரும் ஆடி தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் சோதனை செய்யப்படும் கியூ8 எஸ்.யு.வி. பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 6 மற்றும் மெர்சிடிசிஸ் பென்ஸ் GLE கூப் மாடல்கலுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஆடி கியூ8 மாடலின் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் அதிகம் வெளியாகாத நிலையில், இந்த காரில் 3-லிட்டர் வி6 இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 350 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×