search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் வெளியானது
    X

    டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் வெளியானது

    டேட்சன் இந்தியா நிறுவனம் டேட்சன் கோ மற்றும் கோ பிளஸ் லிமிட்டெட் எடிஷன் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ ரீமிக்ஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ரீமிக்ஸ் எடிஷன் புதிய ஹூட், ரூஃப் ராப்ஸ், கருப்பு நிற இன்டீரியர் மற்றும் டூயல்டோன் காம்பினேஷன் செய்யப்பட்டுள்ளது.

    டேட்சன் கோ ரீமிக்ஸ் மாடல் ஓனிக்ஸ் பிளாக் நிறம் மற்றும் ஆரஞ்சு நிற டீக்கல்கள்களை கொண்டிருக்கிறது. டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ ரீமிக்ஸ் மாடல் ஸ்டாம் வைட் மற்றும் டூயல் டோன் சில்வர் நிறங்களிலும் கிடைக்கிறது. லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கபப்ட்டுள்ளன. 

    ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, ஹேன்ட்ஸ்-ஃப்ரீ ப்ளூடூத் ஆடியோ, ட்ரெண்ட் சீட் கவர், முன்பக்கம் கருப்பு நிற கிறில், கருப்பு நிற வீல் கவர், பியானோ பிளாக் இன்டீரியர், ஸ்போர்ட் ஸ்பாயிலர், அழகிய க்ரோம் எக்சாஸ்ட் ஃபினிஷர் மற்றும் க்ரோம் பம்ப்பர் பெசல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் மாடல்களில் 1.2 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஃபாலோ மீ ஹெட்லேம்ப், ஸ்பீடு சென்சிட்டிவ் எலெக்ட்ரிக் பவர் ஸ்டீரிகங், முன்பக்கம் பவர் விண்டோ,  ஆக்சில்லரி இன், யு.எஸ்.பி. சார்ஜர் போர்ட் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் ரீமிக்ஸ் லிமிட்டெட் எடிஷன் விலை முறையே ரூ.4,21,000 மற்றும் ரூ.4,99,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது.
    Next Story
    ×