search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் புதிய சாதனை படைத்த மாருதி ஆல்டோ
    X

    இந்தியாவில் புதிய சாதனை படைத்த மாருதி ஆல்டோ

    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் மாருதி சுசுகி ஆல்டோ முதலிடம் பிடித்திருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் என்ட்ரி-லெவல் கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆல்டோ மற்றும் செலரியோ போன்ற மாடல்களின் விற்பனை கொண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி கணிசமான பங்குகளை பெற்றிருக்கிறது. இத்துடன் மாருதி ஆல்டோ இந்திய சந்தையில் புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறது.

    மாருதி ஆல்டோ இந்தியாவில் 35 லட்சம் யூனிட் விற்பனையை கடந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் சமீபத்திய அறிவிப்பின் படி ஆல்டோ மாடலுக்கு இந்தியாவில் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் ஏற்ற விலை மற்றும் அம்சங்கள் உள்ளிட்டவை ஆல்டோ வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    2017-18 ஆம் ஆண்டில் மாருதி ஆல்டோ விற்பனை ஆறு சதவிகிதம் வரை அதிகரித்து இதே காலகட்டத்தில் சந்தையில் 33 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது. இதில் 44 சதவிகித விற்பனை இளம் வாடிக்கையாளர்கள் (அதாவது 35 வயதுக்குள் உள்ளவர்கள்) என அறிவித்துள்ளது. புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் இளம் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது.

    தற்சமயம் மாருதி ஆல்டோ இரண்டு வித இன்ஜின்கள் - 800சிசி மற்றும் 1-லிட்டர் இன்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளது. 800சிசி பெட்ரோல் இன்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 69 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1-லிட்டர் இன்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்கியூ மற்றும் 5- ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பவர் ஸ்டீரிங், முன்பக்கம் பவர் விண்டோ, உள்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ORVM, அழகிய ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டீரியோ மற்றும் இதன் டாப் எண்ட் மாடலில் டிரைவர்-சைடு ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×