search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் 60,000 பேர் முன்பதிவு செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்
    X

    இந்தியாவில் 60,000 பேர் முன்பதிவு செய்த மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் வெளியீட்டை தொடர்ந்து இதுவரை சுமார் 60,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
    புதுடெல்லி:
      
    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கபப்ட்ட 2018 ஸ்விஃப்ட் இந்தியாவில் ரூ.4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுவரை 60,000 பேர் புதிய ஸ்விஃப்ட் வாங்க முன்பதிவு செய்திருக்கின்றனர். மேலும் அடுத்த ஒரு மாத காலத்தில் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் ஜனவரி 2018 முதல் புதிய ஸ்விஃப்ட் முன்பதிவுகள் துவங்கிய நிலையில், இதன் காத்திருப்பு காலம் ஆறு முதல் எட்டு வாரங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் விநியோகம் சமீபத்தில் துவங்கிய நிலையில் இந்தியாவில் மூன்றாம் தலைமுறை வெற்றிகர ஸ்விஃப்ட் மாடலாக அமைந்துள்ளது. 

    கடந்த மாதம் மட்டும் சுமார் 15,000 பழைய ஸ்விஃப்ட் மாடல்களை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்ததாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. புதிய தலைமுறை ஸ்விஃப்ட் விலை முந்தைய மாடலை விட ரூ.20,000 அதிகமாக விலை நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய மாடலின் விலைக்கு ஏற்ற கூடுதல் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் இந்திய பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்திற்கு ஏற்ப முந்தைய மாடலை விட கூடுதல் மைலேஜ் வழங்குகிறது. 



    புதிய ஸ்விஃப்ட் உள்புறத்தில் பல்வேறு உயர் ரக அம்சங்கள், டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதுவித ஸ்டீரிங் வீல் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை டாப் எண்ட மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

    இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் ரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 82 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்கியூவும், 1.3 லிட்டர் DDiS டீசல் இன்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்கியூ மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விலை 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்ஸ டெல்லி) முதல் துவங்கி டாப் எண்ட் மாடலின் விலை ரூ.7.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கலாம் என்றும் முன்பதிவு செய்வோர் ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×