search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கோப்பு படம்: பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ்
    X
    கோப்பு படம்: பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ்

    இன்ஜின் மென்பொருளில் கோளாறு 11,700 பி.எம்.டபுள்யூ. கார்கள் திரும்ப பெறப்பட்டன

    பி.எம்.டபுள்யூ. தயாரித்து வெளியிட்ட 5 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் கார்களில் சுமார் 11,700 யூனிட்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
    பிராங்பர்ட்:

    ஜெர்மனியை சேர்ந்த பி.எம்.டபுள்யூ. உலகின் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. பி.எம்.டபுள்யூ. தயரித்து விற்பனைக்கு அனுப்பப்பட்ட 11700 கார்கள் திரும்ப பெறப்பட்டுவதாத அறிவிக்கப்பட்டுள்ளன.

    இன்ஜின் கட்டுப்பாடு சிஸ்டத்தில் மென்பொருள் தவறாக பொருத்தப்பட்டதே கார்கள் திரும்ப பெறப்பட்டதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மென்பொருள் பிழை காரணமாக அதிநவீன 6 சிலிண்டர் இன்ஜின்கள் சரிவர செயல்படவில்லை. 

    2012 முதல் 2017-ம் ஆண்டிற்குள் விற்பனை செய்யப்பட்ட பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ‘ஃபிளாக்ஷிப்- 7 சீரிஸ்’ மற்றும் ‘மிட்ரேஞ்ச்- 5 சீரிஸ் ஆகிய 2 மாடல் கார்கள் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களில் அதிக செயல்திறன் கொண்ட டீசல் இன்ஜின்களும் மூன்று டர்போ சார்ஜர்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    முன்னதாக வார இதழ் ஒன்றில் வெளியான தகவல்களில் பி.எம்.டபுள்யூ. கார்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் மென்பொருள் காரில் இருந்து வெளிவரும் கேடு விளைவிக்கும் புகையை மறைக்க உதவியதாக தெரிவித்திருந்தது. இதனை பி.எம்.டபுள்யூ. மறுத்த நிலையில், தற்சமயம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகி இருக்கிறது.  

    ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் 'டீசல்கேட்' குற்றச்சாட்டில் சிக்கி சுமார் 3170 கோடி அமெரிக்க டாலர்களை அபராதம் மற்றும் இதர தொகையை செலுத்தியது. இவற்றில் இதுவரை சுமார் 2000 கோடிகளை ஃபோக்ஸ்வேகன் செலுத்தி இருக்கிறது.
    Next Story
    ×