search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018: புதிய அப்டேட்
    X

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018: புதிய அப்டேட்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 ஸ்விஃப்ட் மாடல்கள் இந்திய விற்பனையாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018 மாடல்களின் முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கிய சில தினங்களில் புதிய கார் விற்பனையாளர்களிடம் காணப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய 2018 ஸ்விஃப்ட் பல நிறங்களில் புதிய ஸ்விஃப்ட் கார் வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருக்கின்றன.

    ஆட்டோ எக்ஸ்போவில் விலை மற்றும் விநியோகம் சார்ந்த அறிவிப்புக்கு பின் புதிய ஸ்விஃப்ட் விநியோகம் துவங்க இருக்கின்றன. எனினும் வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக ரூ.11,000 முன்பணம் செலுத்தி புதிய ஸ்விஃப்ட் காரினை முன்பதிவு செய்யலாம். இந்தியாவில் 2018 ஸ்விஃப்ட் விலை ரூ.5 முதல் ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளியாகும் முன்பே புதிய ஸ்விஃப்ட் அதிக பிரபலமாகி விட்டதால், புதிய காரின் காத்திருப்பு காலம் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகியின் ஹார்டெக்ட் தளத்தை சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஸ்விஃப்ட் நான்கு வேரியண்ட்களில் வெளியிடப்பட இருக்கிறது.



    மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் மாடல் 82 பி.எச்.பி. பவர் மற்றும் 112 என்.எம். டார்கியூ மற்றும் 74 பி.எச்.பி. பவர் மற்றும் 190 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கும். புதிய ஸ்விஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களிலும் 5- ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.

    புதிய ஸ்விஃப்ட் CNG மற்றும் LPG போன்று மாற்று எரிசக்தி கொண்ட மாடல்கள் வெளியிடப்படாது என கூறப்படுகிறது. இதன் விலை பலேனோ மற்றும் புதிய டிசையர் போன்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2018 இந்தியாவில் ஹூன்டாய் கிரான்ட் i10, ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×