search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் வெஸ்பா கிளப் ரேன்ஜ் ஸ்கூட்டர் அறிமுகம்
    X

    இந்தியாவில் வெஸ்பா கிளப் ரேன்ஜ் ஸ்கூட்டர் அறிமுகம்

    பியாஜியோ நிறுவனம் இந்தியாவில் வெஸ்பா கிளப் ரேன்ஜ் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



    வெஸ்பா கிளப் ரேன்ஜ் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஸ்கூட்டரின் விலை ரூ.72,190 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெஸ்பா கிளப் ரேன்ஜ் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் பிரபல ஸ்கூட்டர் மாடலாக இருக்கிறது.

    இந்த ஸ்கூட்டர் மற்ற மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களை கொண்டிருக்கிறது. எனினும், புதிய ஸ்கூட்டர் புதிய நிறங்கள் மற்றும் அம்சங்களுடன் கிடைக்கிறது. 2012 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கிய வெஸ்பா மாடல்கள் வெற்றிகரமாக இருக்கின்றன.

    புதிய வெஸ்பா கிளப் ரேன்ஜ் ஸ்கூட்டர் - அஸூரோ புரோவென்ஸா, மேஸ் கிரே, கிளாஸி எல்லோ மற்றும் கிளாஸி ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் தவிர ஸ்கூட்டரின் சில உபகரணங்கள் மட்டும் கிளாஸ் பிளாக் நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.



    மற்ற வெஸ்பா ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று புதிய கிளப் ரேன்ஜ் ஸ்கூட்டரிலும் 125சிசி சிங்கிள் சிலி்ண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.76 பி.ஹெச்பி. பவர், 10.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. வெஸ்பா கிளப் ரேன்ஜ் ஸ்கூட்டர் லிட்டருக்கு 45 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வெஸ்பா கிளப் ரேன்ஜ் ஸ்கூட்டரின் முன்புறம் ஒற்றை சைடு ஆம் சஸ்பென்ஷனும், பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரேக்கிங்கிற்கு முன்புறம் 150 எம்.எம். பின்புறம் 140 எம்.எம். டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×