search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 விலை குறைப்பு
    X

    இந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 விலை குறைப்பு

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் டாமினர் 400 மோட்டார்சைக்கிளின் விலையை குறைத்திருக்கிறது. #BajajDominar400



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலையை குறைத்திருக்கிறது. இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட மாடல் விலை ரூ.1,73,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 400 விலையில் ரூ.3,723 குறைத்திருக்கிறது.

    பஜாஜ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் டாமினர் 400 புதிய விலை ரூ.1,70,138 என மாற்றப்பட்டுள்ளது. இங்கு இரண்டு விலையும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறது. 

    புதிய டாமினர் மோட்டார்சைக்கிளில் எக்சாஸ்ட் முந்தைய மாடலை விட வித்தியாசமாக இருக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் இரு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒன்று ஹெட்லேம்பின் மேல் மற்றொன்று பெட்ரோல் டேன்க் மேல் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இவை விவரங்களை மிக அழகாக வரிசைப்படுத்துகின்றன.



    2019 டாமினர் 400 மோட்டார்சைக்கிளில் 373.2சிசி, லிக்விட் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை இந்த என்ஜின் 40 பி.எஸ். @8650 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய மாடலை விட 5 பி.எஸ். வரை அதிகம் ஆகும். செயல்திறனை அதிகப்படுத்த பஜாஜ் நிறுவனம் DOHC எனும் தொழிலநுட்பத்தை வழங்கியுள்ளது.

    2019 பஜாஜ் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியுடன் அரோரா கிரீன் மற்றும் வைன் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் 43 எம்.எம். யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஃபோர்க் கே.டி.எம். டியூக் 390 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் புதிய டாமினர் 400 மோட்டார்சைக்கிள் பி.எம்.டபுள்யூ. ஜி310ஆர் மற்றும் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர். 310 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    Next Story
    ×