search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் கே.டி.எம். 125 டியூக் மோட்டார்சைக்கிள் விலை மாற்றம்
    X

    இந்தியாவில் கே.டி.எம். 125 டியூக் மோட்டார்சைக்கிள் விலை மாற்றம்

    கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் 125 டியூக் மோட்டார்சைக்கிளின் விலை மாற்றப்பட்டுள்ளது. #KTM125Duke



    கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் தனது 125 டியூக் மோட்டார்சைக்கிளின் விலையை அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் 125 டியூக் மோட்டார்சைக்கிள் விலை ரூ.7,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது.

    125 டியூக் மோட்டார்சைக்கிள் இந்தியா சந்தையில் கே.டி.எம். நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. இந்தியாவில் கே.டி.எம். 125 டியூக் மோட்டார்சைக்கிள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ.1.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 

    கே.டி.எம். 125 டியூக் மோட்டார்சைக்கிளில் 124.7 சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.5 பி.ஹெச்.பி. பவர், 12 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் சக்திவாய்ந்த 125 சிசி மோட்டார்சைக்கிளாக கே.டி.எம். 125 டியூக் இருக்கிறது.  



    கே.டி.எம். 125 டியூக் மாடலில் 10-வே அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 300 எம்.எம். டிஸ்க் பிரேக் மற்றும் ரேடியல் 4-பிஸ்டன் கேரிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் பிரேக் சிங்கில் பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்பட்டுள்ளது.

    இரு பிரேக்களும் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வசதியுடன் வருகிறது. கே.டி.எம். 125 டியூக் மோட்டார்சைக்கிளில் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் டேன்க் 10.2 லிட்டர் கொள்ளளவு கொண்டிருக்கிறது.
    Next Story
    ×