search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கவாசகி நின்ஜா விநியோக விவரம்
    X

    கவாசகி நின்ஜா விநியோக விவரம்

    கவாசகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த நின்ஜா மோட்டார்சைக்கிளின் விநியோக விவரங்களை பார்ப்போம். #NinjaZX 6R #Motorcycle



    பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி வரும் கவாசகி நிறுவனம் தனது நின்ஜா ZX 6R மாடலுக்கான முன்பதிவை கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கியது. இந்தியாவுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த மாடல் விற்பனை சமீபத்தில் துவங்கியது. 

    ஜப்பானில் உள்ள கவாசகி ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு உதிரி பாகங்களாக இந்தியாவில் இறக்குமதி செய்து பின் அதனை ஒன்றிணைத்து விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ.10.49 லட்சம் என நிறுவனம் அறிவித்தது. இதனால் இந்த சலுகை குறிப்பிட்ட காலம் வரையில்தான் இருக்கும். அதன் பிறகு இதன் விலை உயரும் என்று கூறப்படுகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள்  636 சி.சி. என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 4-சிலிண்டர் என்ஜின்  130 பி.ஹெச்.பி. திறனை 70.8 நியூட்டன் மீட்டர் இழுவிசையைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்சுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 



    இத்துடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி, ஏ.பி.எஸ், கவாசகி க்விக் ஷிப்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த மோட்டார்சைக்கிளின் எடை 196 கிலோவாகும். இதன் உயரம் 830 மி.மீ. ஒற்றை இருக்கையுடன் இது வந்துள்ளது.

    இந்த பிரிவில் நின்ஜாவுக்கு கடும் போட்டியாக இருக்கக் கூடியது டிரையம்ப் ஸ்டிரீட் ஆர்.எஸ். மட்டுமே. விலை மற்றும் செயல்பாடுகளில் ஓரளவு பொருந்தி வரக்கூடியதும் இந்த மோட்டார்சைக்கிள் மட்டுமே. இதேபோல டுகாடி 959 பனிகேல் மோட்டார்சைக்கிளும் ஓரளவு போட்டியாக இருக்கக் கூடும்.

    வாடிக்கையாளர்கள் ரூ. 1.5 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விநியோகம் தற்சமயம் துவங்கியுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளை வாங்க முன்பதிவு செய்பவர்கள் டெலிவரி குறித்த விவரங்களை அருகிலுள்ள கவாசகி விற்பனையகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×