search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹீரோ மோட்டார்சைக்கிள்
    X

    விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹீரோ மோட்டார்சைக்கிள்

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவு விற்பனையை பதிவு செய்துள்ளது. #Xtreme200R #Motorcycle



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் டிசம்பர் 2018 மாதத்தில் மட்டும் சுமார் 1438 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. 

    விற்பனையை பொருத்தவரை ஹீரோ நிறுவனத்தின் மற்ற மோட்டார்சைக்கிள்களை விட இது குறைவு தான் என்றாலும் 200சிசி பிரிவில் இது குறிப்பிடத்தக்கவொன்றாக பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மோட்டார்சைக்கிள் ஆட்டோ எக்ஸ்போ 2018 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. 200சிசி வாகன பிரிவில் கே.டி.எம். 200 டியூக், பஜாஜ் பல்சர் என்.எஸ். 200 மற்றும் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 உள்ளிட்ட மாடல்கள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எக்ஸ்ட்ரீம் 200ஆர் மற்ற மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R மாடலில் 200சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். பவர் மற்றும் 17.2 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த என்ஜினில் பேலென்சர் ஷாஃப்ட் வழங்கப்பட்டிருப்பதால், அதிர்வுகளை குறைத்து, பின்புற சக்கரத்திற்கு அதிக திறனை அனுப்புகிறது. 

    ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R லிட்டருக்கு 39.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R டைமண்டு ஃபிரேம் சேசிஸ், முன்பக்கம் 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் 276 மில்லிமீட்டர் ஒற்றை டிஸ்க் பிரேக், பின்புறம் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது. 
    Next Story
    ×