search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2019 சுசுகி வி ஸ்டாம் 650XT ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம்
    X

    2019 சுசுகி வி ஸ்டாம் 650XT ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம்

    சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் 2019 வி ஸ்டாம் 650XT ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. #SUZUKI #motorcycle



    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா தனது 2019 வி ஸ்டாம் 650XT ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய 2019 மோட்டார்சைக்கிள்களின் விலை ரூ.7.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனினும், 2019 மாடலில் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளில் ஹசார்டு லைட்கள் மற்றும் சைடு ரிஃப்ளெக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை புதிய மோட்டார்சைக்கிள் சாம்பியன் எல்லோ மற்றும் பியல் வைட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. 

    வடிவமைப்பை பொருத்தவரை புதிய வி ஸ்டாம் 650XT மோட்டார்சைக்கிள் அதிகளவு மாற்றம் செய்யப்படவில்லை. சுசுகி வி ஸ்டாம் 650XT இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமானது. 2019 வி ஸ்டாம் 650XT மாடல் மூன்று விதங்களில் உயரத்தை மாற்றக்கூடிய விண்ட்ஸ்கிரீன், ஈசி-ஸ்டார்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 3-ஸ்டேஜ் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது.



    2019 சுசுகி வி ஸ்டாம் 650XT மோட்டார்சைக்கிளில் 6445சிசி வி-ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர், 62.3 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 310 எம்.எம். டிஸ்க், பின்புறம் 260 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. டிஸ்க் பிரேக்களுடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×