search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பாதுகாப்பு அம்சம் பெறும் ராயல் என்ஃபீல்டு புல்லட்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் மோட்டார்சைக்கிளில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது.
    புதுடெல்லி:

    ஏப்ரல் 1, 2018 முதல் 125சிசி-க்கும் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) கொண்டிருப்பது அவசியமாகிறது. அந்த வகையில் ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் அம்சம் பெறும் முதல் மோட்டார்சைக்கிளாக இருக்கிறது.

    ராயல் என்ஃபீல்டு புல்லட் மாடலில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் முன்பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மற்றும் 500 மோட்டார்சைக்கிளில் இந்த பாதுகாப்பு அம்சம் வழங்கப்படுகிறது.

    டூயல்-சேனல் ஏபிஎஸ் அம்சத்துடன் ஒப்பிடும் போது சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிறப்பானதாக இருக்காது என்றாலும் ஏபிஎஸ் இல்லாத மாடலுக்கு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் போதுமானதாக இருக்கிறது. அதிக எடை கொண்ட புல்லட் மாடல்களில் ஏபிஎஸ் வசதி மோட்டார்சைக்கிளின் பிரேக்கிங் அம்சத்தை மேம்படுத்தும்.

    புதிய விதிமுறைகளினால் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விலையை குறைவாக வைக்க உதவும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட இருப்பதால் ராயல் என்ஃபீல்டு புல்லட் விலை அதிகரிக்கப்படாது என கூறப்படுகிறது. ஏபிஎஸ் வசதி கொண்ட புல்லட் மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலில் டூயல்-சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த மாடலில் டூயல்-சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வெளியாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் GT 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் டூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட இருக்கிறது.
    Next Story
    ×