search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சுசுகி இன்ட்ரூடர் FI இந்தியாவில் வெளியானது
    X

    சுசுகி இன்ட்ரூடர் FI இந்தியாவில் வெளியானது

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா தனது இன்ட்ரூடர் FI வேரியண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இன்ட்ரூடர் FI வேரியண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இன்ட்ரூடர் ஃபியூயல் இன்ஜெக்ஷன் தவிர எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

    புதிய சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலில் 154.9சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் சுசுகி ஜிக்சர் மாடலிலும் வழங்கப்பட்டது. புதிய இன்ட்ரூடர் 150 இன்ஜின் 14.6bhp மற்றும் 14Nm செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    முன்பக்கம் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்களுடன் க்ரூசர் ஒன்றையும் சுசுகி வழங்கியுள்ளது. சுசுகி இன்ட்ரூடர் 150 பெயர் மற்றும் வடிவமைப்பு இன்ட்ரூடர் M1800R மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்ட்ரூடர் M1800R மாடலில் வழங்கப்பட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இன்ட்ரூடர் 150 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

     ஜிக்சர் 150 மாடலுடன் ஒப்பிடும் போது முன்பக்கம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள புதிய மாடலில் ஜிக்சரின் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இதன் பாடி கன்சோல் ஃபிரேம்களில் டூயல்-டோன் நிறம் மற்றும் டபுள் பேரல் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலின் முன்பக்கம் முக்கோண வடிவிலான ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ப்ரோஜெக்டர் மற்றும் எல்இடி லைட் வழங்கியுள்ளதால் நவீன தோற்றம் பெற்றுள்ளது. இதன் முன்பக்க கவுள் அதிவேகமாக செல்லும் போதும் வாகனம் ஓட்டுபவரின் முகத்தில் நேரடியாக காற்று வீசுவதை தடுக்கும் வகையில் காட்சியளக்கிறது. 

    இதன் இன்டிகேட்டர்களும் முன்பக்க கவுளில் வழங்கப்பட்டுள்ளதோடு குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட ரியர் வியூ கண்ணாடிகள் பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. புதிய இன்ட்ரூடர் 150 மாடலின் மற்றொரு சிறப்பம்சமாக அதன் பெட்ரோல் டேன்க் இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக காட்சியளி்க்கும் இதன் பெட்ரோல் டேன்க் மற்ற வாகனங்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

    சுசுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிள் FI வேரியண்ட் விலை ரூ.1.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய கார்புரேட்டர் மாடலை விட ரூ.7000 அதிகம் ஆகும். சுசுகி இன்ட்ரூடர் கார்புரேட்டர் மாடல் விலை ரூ.99,995 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×