search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹீரோ பேஷன் ப்ரோ மற்றும் பேஷன் எக்ஸ்ப்ரோ இந்தியாவில் வெளியானது
    X

    ஹீரோ பேஷன் ப்ரோ மற்றும் பேஷன் எக்ஸ்ப்ரோ இந்தியாவில் வெளியானது

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பேஷன் ப்ரோ மற்றும் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் பேஷன் ப்ரோ மற்றும் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் வெளியாகி உள்ளது. புதிய பேஷன் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 100 - 110சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 75% பங்குகளை பெற்றிருக்கிறது. ஹீரோ பேஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது பெரிய மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. முதலிடத்தில் ஹீரோ ஸ்ப்லெண்டர் இருக்கிறது.

    புதிய பேஷன் ப்ரோ மாடலில் 11 லிட்டர் ஃபியூயல் டேன்க், ஃபிளஷ் டைப் கேப் வழங்கப்பட்டுள்ளது. இதன் டெயில் லேம்ப் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய பேஷன் ப்ரோ டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஃபியூயல் காஜ், ட்ரிப் மீட்டர் மற்றும் சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.



    பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிள் ஸ்போர்ட்ஸ் ரெட், பிளாக் மோனோடோன், ஃபோர்ஸ்டு சில்வர், ஹெவி கிரே மற்றும் ஃப்ராஸ்ட் புளூ என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. பேஷன் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிளில் வித்தியாசமான கௌல் வடிவமைப்பு, எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ் ப்ரோ மற்றும் பேஷன் ப்ரோ மோட்டார்சைக்கிள்களிலும் ஒரே மாதிரியான இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டிருந்தாலும் ப்ரோ மாடலில் 9.2 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பேஷன் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள் ஸ்போர்ட்ஸ் ரெட் + பிளாக், பிளாக் + ஸ்போர்ட்ஸ் ரெட், பிளாக் + டெக்னோ புளூ, பிளாக் + ஹெவி கிரே மற்றும் ஃபோர்ஸ் சில்வர் + பிளாக் என ஐந்து வித டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. எக்ஸ் ப்ரோ மாடலில் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஹீரோ பேஷன் ப்ரோ மற்றும் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள்களும் BS-IV சார்ந்த 110 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 9.3 பி.ஹெச்.பி. பவர் @ 7500 ஆர்.பி.எம்., 9 என்.எம். டார்கியூ @ 5500 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார்சைக்கிள்களும் மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 7.45 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹீரோ பேஷன் ப்ரோ மற்றும் எக்ஸ் ப்ரோ மோட்டார்சைக்கிள்களின் விலை முறையே ரூ.53,189 மற்றும் ரூ.54,189 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×