search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் ஹோன்டா X பிளேடு அறிமுகம்
    X

    இந்தியாவில் ஹோன்டா X பிளேடு அறிமுகம்

    இந்தியாவில் ஹோன்டா X பிளேடு மோட்டார்சைக்கிளை ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஹோன்டா X பிளேடு மோட்டார்சைக்கிள் வெளியிட்டுள்ளது. ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹோன்டா X பிளேடு மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. 

    புதிய ஹோன்டா X பிளேடு மாடலில் எல்இடி ஹெட்லைட், டூயல் அவுட்லெட் போர்ட் சைலென்சர், லின்க்-டைப் கியர் ஷிஃப்டர், ஸ்ப்லிட் கிராப்-ரெயில்கள், அலாய் வீல், முன்பக்க டிஸ்க் பிரேக், ஹக்கர் ஃபெண்டர் மற்றும் மஸ்குலார் கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    ஹோன்டா X-பிளேடு மோட்டார்சைக்கிளில் 162.71 சிசி HET இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 13.93 பி.ஹெச்.பி. @ 8500 ஆர்.பி.எ்ம., 13.9 என்.எம். டார்கியூ @6000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர செயல்திறன் வழங்குமளவு புதிய இன்ஜின் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்- சர்வீஸ் டியூ இன்டிகேட்டர் மற்றும் கியர் பொசிஷன் இன்டிகேட்டருடன் வழங்கப்பட்டுள்ளது. 1347 மில்லிமீட்டர் வீல்பேஸ், அகலமான 130 செக்ஷன் டியூப்லெஸ் பின்புற டையர் வழங்கப்பட்டுள்ளது. 



    இவ்வகை டையர் இந்தியாவின் மோசமான சாலைகளிலும் சிறப்பான பேலண்ஸ் வழங்குகிறது. இத்துடன் நீண்ட தூர பயணங்களுக்கும் சௌகரியமான அனுபவத்தை வழங்குகிறது. மேட் மார்வெல் புளூ மெட்டாலிக், மேட் ஃபுரோஸென் சில்வர் மெட்டாலிக், பியல் ஸ்பாட்டன் ரெட், பியல் இக்னியஸ் பிளாக் மற்றும் மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் ஹோன்டா X-பிளேடு மோட்டார்சைக்கிள் விலை ரூ.78,500 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோன்டா X பிளேடு மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் ஹோன்டா சிபி ஹார்னெட் 160 ஆர். மாடலை விட ரூ.4000 விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹோன்டா X பிளேடு மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சுசுகி ஜிக்சர் மற்றும் பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது.
    Next Story
    ×