search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹார்லி டேவிட்சன் மாடல்களின் இந்திய விலை குறைப்பு
    X

    ஹார்லி டேவிட்சன் மாடல்களின் இந்திய விலை குறைப்பு

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் கம்ப்லீட்லி பில்ட் யூனிட் மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் கம்ப்லீட்லி பில்ட் யூனிட் (CBU) மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    இந்தியாவில் விற்பனையாகும் 16 ஹார்லி மோட்டார்சைக்கிள்களில் நான்கு மாடல்கள் கம்ப்லீட்லி பில்டு யூனிட் ரகத்தை சேர்ந்தது ஆகும். இவை நான்கும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதும், மற்ற 10 மாடல்களின் விலையை ஹார்லி டேவிட்சன் உயர்த்தவில்லை.

    சமீபத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 800சிசி-க்கும் அதிக திறனுள்ள மோட்டார்சைக்கிள்களுக்கான சுங்க வரி 75% இல் இருந்து 50% ஆக குறைக்கப்பட்டது. இதேபோன்று 800சிசி-க்கும் குறைந்த திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களின் சுங்க வரி 60% என நிர்ணயம் செய்யப்பட்டது. முன்னதாக இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்மிஷன் எந்திர பாகங்களுக்கான சுங்க வரி 10% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டது.



    ஹார்லி டேவிட்சன் ரோட் கிங், ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல், ரோட் கிளைட் ஸ்பெஷல் மற்றும் சி.வி.ஓ. லிமிட்டெட் உள்ளிட்ட க்ரூசர் மாடல்கள் அந்நிறுவனத்தின் கம்ப்லீட்லி பில்ட் யூனிட் ரகத்தை சேர்ந்தவையாகும். அந்த வகையில் ரோட் கிங் விலை ரூ.3.36 லட்சம், ரோட் கிளைட் விலை ரூ.2.6 லட்சம் வரை குறைந்துள்ளது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் கிளைட் ஸ்பெஷல் மற்றும் சி.வி.ஓ. லிமிட்டெட் விலையில் ரூ.3.50 லட்சம் குறைந்திருக்கிறது.

    இந்தியாவில் வசூலிக்கப்படும் சுங்க வரி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். எனினும் இந்திய சந்தையின் முக்கியத்துவத்தை ஹார்லி டேவிட்சன் உணர்ந்திருக்கிறது. பிரீமியம் க்ரூசர் மாடல்கள் மட்டுமின்றி ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் தனது பெரும்பாலான மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வருகிறது. 

    ஹார்லியின் ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் மாடல்கள் ஹரியானாவில் இயங்கி வரும் ஆலையில் உருவாக்கப்படுகிறது. இவை இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    Next Story
    ×