search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் பஜாஜ் அவென்ஜர் ஸட்ரீட் 180 வெளியானது
    X

    இந்தியாவில் பஜாஜ் அவென்ஜர் ஸட்ரீட் 180 வெளியானது

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2018 புத்தம் புதிய அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புத்தம் புதிய 2018 அவென்ஜர் ஸ்ட்ரீட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 மாடலுக்கு மாற்றாக புதிய 180 ஸ்ட்ரீட் மாடல் அறிமுகமாகியுள்ளது. 

    இந்திய சந்தையில் தனது நிலையை பலப்படுத்த சக்திவாய்ந்த இன்ஜின் கொண்ட அவென்ஜர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட 180சிசி இன்ஜின் கொண்ட புதிய அவென்ஜர் சக்திவாய்ந்ததாக இருப்பதோடு, சந்தையில் வெளியாகும் புதிய மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமையும்.

    புதிய அவென்ஜர் 180 மாடலில் 180சிசி DTSi இன்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 15.3 பி.ஹெச்.பி. பவர் @8500 ஆர்.பி.எம், 13.07 என்.எம். டார்கியூ @6500 ஆர்.பி.எம். மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் கிரவுண்ட் கிளியரன்ஸ் 169 மில்லிமீட்டர் மற்றும் வீல்பேஸ் 1480 மில்லிமீட்டர் ஆகும். 



    அவென்ஜர் 180 மாடலின் எடை 150 கிலோ மற்றும் 13-லிட்டர் ஃபியூயல் டேண்க் கொண்டுள்ளது. புதிய 2018 அவென்ஜர் 150 ஸ்ட்ரீட் மாடலில் சற்றே வித்தியாசமான ஹெட்லேம்ப், எல்இடி டி.ஆர்.எல்., மற்றும் முன்புறம் பெரிய விண்ட்ஸ்கிரீன், சிறிய கௌல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சிறிய ஹேன்டிள்பார், அலாய் வீல், மற்றும் கிராப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது. 

    பஜாஜ் நிறுவனத்தின் 2018 அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 மாடல் சுசுகி இண்ட்ரூடர் 150 மாடலுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. க்ரூசர் மாடலில் சுசுகி இண்ட்ரூடர் புதுவரவு மாடல் என்பதால் அவென்ஜர் விற்பனை இந்த பிரிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் பஜாஜ் அவென்ஜர் 180 ஸ்ட்ரீட் விலை ரூ.83,475 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×