search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    புதிய நிறத்தில் டி.வி.எஸ். ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியானது
    X

    புதிய நிறத்தில் டி.வி.எஸ். ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியானது

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் ஸ்கூட்டி செஸ்ட் புதிய நிறத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனம் இந்தியாவில் ஸ்கூட்டி செஸ்ட் 110 மேட் பர்ப்பிள் எனும் புதிய நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

    ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கூட்டி செஸ்ட் விலை ரூ.49,211 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட ஸ்கூட்டி செஸ்ட் 110 ஸ்கூட்டர்களை டி.வி.எஸ். நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்தது. 

    ஏற்கனவே சிவப்பு, மஞ்சள், கருப்பு மற்றும் நீலம் என நான்கு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய நிறம் தவிர ஸ்கூட்டரில் எவ்வித காஸ்மெடிக் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. டி.வி.எஸ். ஸ்கூட்டி செஸ்ட் 110 மாடலில் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 



    இந்த இன்ஜின் 7.8 பி.ஹெச்.பி. @7500 ஆர்.பி.எம். மற்றும் 8.4 என்.எம். டார்கியூ @5500 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது. இதன் சஸ்பென்ஷன் செட்டப் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஹைட்ராலிக் மோனோஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் 110 மில்லிமீட்டர் டிரம் பிரேக், பின்புறம் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் கொண்டுள்ளது.

    டி.வி.எஸ். ஸ்கூட்டி செஸ்ட் 19 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ், யுஎஸ்பி சார்ஜர், டேடைம் ரன்னிங் லைட் கொண்டுள்ளது. இதன் மேட் சீரிஸ் பிரத்யேக பூட் லைட், டூயல் டோன் சீட், சில்வர் ஓக் இன்டீரியர் பேனல், 3D செஸ்ட் 110 லோகோ இடம்பெற்றிருக்கிறது. 

    இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா-ஐ,  சுசுகி லெட்ஸ் ஹீரோ பிளெஷர் மற்றும் யமஹா ரே-இசட் உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. சமீபத்தில் டி.வி.எஸ். என்டார்க் 125 எனும் புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் முதல் 125சிசி ஸ்கூட்டர் ஆகும்.
    Next Story
    ×