search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.
    • கவாசகி நிறுவனம் தனது ஹைப்ரிட் மோட்டார்சைக்கிளுக்கு இந்தியாவில் காப்புரிமை பெற்றது.

    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிளுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள், உலகின் முதல் ஸ்டிராங் ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இந்த மாடல் சந்தையில் வெற்றி பெறும் பட்சத்தில், இதே போன்ற மாடல்கள் சந்தையில் அதிகளவில் அறிமுகம் செய்யப்படலாம்.

     


    கவாசகி நின்ஜா 7 ஹைப்ரிட் மாடலில் 451சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 12 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட டிராக்ஷன் மோட்டார் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த மாடலின் ஒட்டுமொத்த திறன் 60 ஹெச்.பி. வரை இருக்கும் என்று தெரிகிறது.

    இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் உடன் 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று தெரிகிறது. நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள், சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் வழக்கமான 650சிசி முதல் 700சிசி மோட்டார்சைக்கிளுக்கு இணையான திறன் கொண்டிருக்கும் என்று கவாசகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    செயல்திறன் ஒருபக்கம் அதிகளவில் இருக்கும் போதும், ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் என்பதால் நின்ஜா 7 ஹைப்ரிட் மாடல் சந்தையில் தற்போது கிடைக்கும் 250சிசி மாடல்கள் வழங்கும் மைலேஜ் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாடலின் செயல்திறன் மற்றும் மைலேஜ் அடிப்படையில் இது சந்தையில் நிச்சயம் வெற்றி பெறும் என்றே தெரிகிறது.

    கவாசகி நின்ஜா 7 ஹைப்ரிட் மாடலில் அதிக தரமுள்ள டி.எஃப்.டி. டேஷ்போர்டு மற்றும் ரைடாலஜி செயலி, வாக் மோட், ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இந்த பைக்கின் முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் முன்புறம் இரு டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் அறிமுகமாகும் போது புதிய கவாசகி நின்ஜா 7 ஹைப்ரிட் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் நின்ஜா ZX-6R மாடலின் மேல் நிலைநிறுத்தப்படலாம்.

    • மொத்தத்தில் 120 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
    • இந்த மாடலில் 6.75 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் உள்ளது.

    ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கோஸ்ட் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்நிறுவனத்தின் 120-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிசம் என்று அழைக்கப்படும் இந்த கார் மொத்தத்தில் 120 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    புதிய கோஸ்ட் ப்ரிசம் மாடலில் ஏராளமான காஸ்மடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இவை இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் டிரெண்டிங் டிசைன் மற்றும் அழகு சாதன துறையை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் கன்மெட்டல் கிரே நிறம் கொண்டிருக்கிறது.

    இதுதவிர புதிய கோஸ்ட் ப்ரிசம் மாடல்- ஃபீனிக்ஸ் ரெட், டர்சீஸ், மாண்டரின் மற்றும் ஃபோர்ஜ் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இவை காரின் பம்ப்பர் இன்சர்ட்கள், பிரேக் கேலிப்பர்கள மற்றும் கோச்லைன் உள்ளிட்டவைகளில் இடம்பெற்றுள்ளன. இதன் இன்டீரியர் பற்றிய விவரங்கள் அதிகளவு வெளியாகவில்லை.

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ப்ரிசம் மாடலில் 6.75 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 555 ஹெச்.பி. பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 

    • இந்த மாடல் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது.
    • இந்த மாடலில் 399 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம்.

    கே.டி.எம். நிறுவனத்தின் அடுத்த தலைமுறை 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. சேசிஸ் முதல் டிசைன் வரை இந்த மாடல் முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே இந்த பைக் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆஃப் ரோடு டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த பைக்கின் டிசைன் கே.டி.எம். ரேலி பைக்குகளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     


    இதில் ஹை-மவுன்ட் ஃபேரிங், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லைட்கள், உயரமான வின்ட் ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் ஃபியூவல் டேன்க் மெல்லியதாக காட்சியளிக்கிறது. புதிய 390 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடலில் சமீபத்தில் அறிமுகமான 390 டியூக் மாடல்களில் வழங்கப்பட்ட 399 சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த என்ஜின் 45.3 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும் இந்த மாடல் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 மாடலுக்கு போட்டியாக அமையும்.

    • ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.
    • இந்த எஸ்.யு.வி. இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    ஆடி நிறுவனம் தனது முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் மார்ச் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ஆடியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.யு.வி. மாடல் முற்றிலும் புதிய PPE (பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக்) பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் ஆடியின் எதிர்கால இ டிரான் மாடல்கள் உருவாக்கப்பட இருக்கின்றன.

    புதிய காரின் புகைப்படங்களை ஆடி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி கியூ4 மற்றும் கியூ8 இ டிரான் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.-க்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி பல்கேரியன் பியர்டு கிரில் மூடப்பட்டு மெல்லிய லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    போர்ஷே மக்கன் மாடலை போன்றே புதிய கியூ6 மாடலிலும் ஸ்ப்லிட் ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்படுகின்றன. புதிய கியூ6 இ டிரான் உள்புறத்தில் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன்கள்- ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டராக வழங்கப்படுகின்றன.

    புதிய ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 800 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த எஸ்.யு.வி. மாடல் 2-வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.
    • அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்று டி.வி.எஸ். XL100.

    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது பிரபலமான XL100 மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. முதற்கட்டமாக டி.வி.எஸ். XL எலெக்ட்ரிக் வெர்ஷனில் பயன்படுத்துவதற்காக E-XL மற்றும் XL EV என இரண்டு பெயர்களுக்கு அந்நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது.

    காப்புரிமை கோரியிருப்பதை அடுத்து, டி.வி.எஸ். நிறுவனம் தனது XL மொபெட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக டி.வி.எஸ். XL100 விளங்குகிறது.

     


    ஐகியூப் மாடலின் வெற்றியை தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் E-XL மற்றும் XL EV மாடல்களை பயன்படுத்த டி.வி.எஸ். நிறுவனம் காப்புரிமை கோரியிருக்கிறது.

    எனினும், இதுபற்றி அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. தற்போது டி.வி.எஸ். XL100 பெட்ரோல் மாடலின் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 59 ஆயிரத்து 695, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மொபெட் பிரிவில் விற்பனை செய்யப்படும் ஒற்றை மாடலாக கைனடிக் E லூனா விளங்குகிறது. இதன் விலை ரூ. 64 ஆயிரத்து 990 என துவங்கி அதிகபட்சம் ரூ. 74 ஆயிரத்து 990, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • கிரெட்டா N லைன் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா N லைன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் N8 மற்றும் N10 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி.-இல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     


    இந்த கார் லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கிரெட்டா N லைன் எஸ்.யு.வி. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் லிட்டருக்கு முறையே 18 மற்றும் 18.2 கிலோமீட்டர்கள் வரை மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கின்றன.

    கிரெட்டா ஸ்டான்டர்டு வெர்ஷனில் உள்ள டர்போ பெட்ரோல் என்ஜின் DCT கியர்பாக்ஸ் வெர்ஷன் லிட்டருக்கு 18.4 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஹூண்டாய் i20 N லைன் மற்றும் வென்யூ N லைன் மாடல்கள் வரிசையில் கிரெட்டா N லைன் மூன்றாவது N சீரிஸ் மாடலாக இணைந்துள்ளது.

    • பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியானது.
    • பின்புற டிசைன் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் மிட் சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.

    புதிய மாடல் இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த கார் 5 சீட்டர் வடிவில் அறிமுகமாகுமா அல்லது 7 சீட்டர் வடிவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த நிலையில், டஸ்டரின் 7 சீட்டர் வெர்ஷனான பிக்ஸ்டர் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

     


    புதிய பிக்ஸ்டர் மாடல் CMF-B ஆர்கிடெக்ச்சரில் உருவாகி இருக்கும் என்று தெரிகிறது. இந்த கார் 4.6 மீட்டர் நீளமாக இருக்கும் என்றும் இதன் வீல்பேஸ் பின்புற இருக்கைகளுக்கு ஏற்ற வகையில் அளவில் நீண்டு இருக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்த காரின் புன்புற டிசைன் வழக்கமான டஸ்டர் போன்றில்லாமல் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும்.

    எனினும், இதன் விலை மற்றும் உற்பத்தி செலவீனங்களை குறைவாக வைத்துக் கொள்ளும் நோக்கில், புதிய பிக்ஸ்டர் மாடலின் பாடி பேனல்கள், மெக்கானிக்கல் பாகங்கள் மற்றும் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் டஸ்டர் மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய டஸ்டர் மாடல் மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கசார், எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மற்றும் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

    • டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
    • வட்ட வடிவில் டியூப் போன்ற கிராப் ரெயில் உள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 650சிசி பிரிவில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் முற்றிலும் புதிய புல்லட் 650 மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய புல்லட் 650 மாடலின் தோற்றம் கிளாசிக் 650 போன்றே காட்சியளிக்கிறது. இரு மாடல்களும் அவற்றின் 350சிசி மாடல்களை போன்றே காட்சியளிக்கின்றன. இரு மாடல்களிலும் சதுரங்க வடிவம் கொண்ட ரியர் ஃபென்டர், வட்ட வடிவில் டியூப் போன்ற கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    தற்போதைய ஸ்பை படங்களில் உள்ள மாடல் முந்தைய ஸ்பை படங்களில் இருந்ததை விட வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. புதிய புல்லட் மற்றும் கிளாசிக் 650 மாடல்களில் ஒரே ஃபிரேம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடல்களில் 650சிசி டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த யூனிட் 47 ஹெச்.பி. பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    புதிய ராயல் என்பீல்டு 650 சிசி மாடல்களிலும் எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கபடும் என தெரிகிறது. முன்னதாக சூப்பர் மீடியோர் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட் முதல் முறையாக வழங்கப்பட்டது. ஷாட்கன் போன்றே புதிய 650 டுவின் மாடல்களில் டுவின் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்படுகின்றன. 

    • நபோலி பிளாக் நிறத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதர எஸ்.யு.வி.-க்கள் நபோலி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது இரண்டு பிரபல எஸ்.யு.வி.- தார் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்களை சத்தமின்றி அப்டேட் செய்துள்ளது. இரண்டு எஸ்.யு.வி.-க்களும் தற்போது புதிய பிளாக் நிறத்தில் கிடைக்கின்றன. இந்த நிறம் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த நபோலி பிளாக் நிறத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

     


    தற்போது தார் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் மாடல்கள் முறையே ஐந்து மற்றும் நான்கு வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதன்படி இரு எஸ்.யு.வி.-க்களும் ஸ்டெல்த் பிளாக் நிறத்திலும் கிடைக்கின்றன. மஹிந்திராவின் இதர எஸ்.யு.வி.-க்கள்- ஸ்கார்பியோ N, XUV700, XUV300 மற்றும் பொலிரோ நியோ உள்ளிட்டவை நபோலி பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

     


    முன்னதாக மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 மாடலுக்கான முன்பதிவுகளை நிறுத்துவதாக அறிவித்தது. அந்த வகையில், இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.
    • பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும்.

    மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதில் பலேனோ, ஃபிரான்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் இதர கார் மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷன்கள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டது.

    இவைதவிர மாருதி நிறுவனம் தனது வாகனங்களை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் முற்றிலும் புதிதாக எட்டு கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் எஸ்.யு.வி.-க்கள், எம்.பி.வி.-க்கள் மற்றும் மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது.

     


    இதில் ஒரு மாடல் தாமதமாகவே வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல் எலெக்ட்ரிக் எம்.பி.வி. என்றும் இது YMC எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து பார்ன்-இவி (Born EV) ஆர்கிடெக்ச்சரை உருவாக்கி வருகின்றன.

    இதை கொண்டு பல்வேறு பாடி ஸ்டைல்களில் கார்களை உருவாக்க முடியும். இந்த ஆர்கிடெக்ச்சரில் உருவாகும் எம்.பி.வி. மாடல் தான் YMC எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது என்றும், இந்த மாடல் eVX அறிமுகமாகி ஒன்றரை ஆண்டுகள் கழித்தே அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அறிமுகமாகும் போது மாருதி YMC மாடல் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எம்.பி.வி.-யாக இருக்கும்.

    மாருதியின் புதிய எம்.பி.வி. மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ள நிலையில், இதில் 40 கிலோவாட் ஹவர் மற்றும் 60 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த காரின் ரேன்ஜ் மாருதி eVX மாடலுக்கு இணையாக 550 கிலோமீட்டர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    • பயனர்களின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிகிறது.
    • பயனர்களின் குறையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்துவதற்கென முற்றிலும் புதிய கிளட்ச் சிஸ்டத்திற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. புதிய கிளட்ச் சிஸ்டம் பயனர்களின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் என தெரிகிறது.

    வழக்கமாக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களில் கிளட்ச் வங்கப்படுவதில்லை. மோட்டார்சைக்கிள் தோற்றத்தில் இருந்த போதிலும், பயனர்களுக்கு முழுமையான பைக் ஓட்டும் அனுபவத்தை வழங்காமல் உள்ளது. புதிய சிஸ்டம் பயன்பாட்டிற்கு வரும் போது, பயனர்களின் குறையை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    Source: Bikewale

    Source: Bikewale


    காப்புரிமையின் படி புதிய கிளட்ச் சிஸ்டம் வழக்கமான கிளட்ச் போன்றே இயங்குகிறது. புதிய கிளட்ச் சிஸ்டம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டார்க் மற்றும் குறைந்த வேகத்தில் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங்-ஐ கட்டுப்படுத்த உதவுகிறது.

    கிளட்ச் லீவரை விடுவித்ததும், மோட்டாரில் இருந்து அதிகப்பட்ச திறனை வெளிப்படுத்த உதவுகிறது. இது வழக்கமான மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்றே இயங்குவதால், பெட்ரோல் பைக் அனுபவத்தை அப்படியே கொடுக்கும் என்று தெரிகிறது.

     

    Source: Bikewale

    Source: Bikewale


    புதிய கிளட்ச் சிஸ்டத்தை பெறும் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலாக ஜீரோ SR/F என கூறப்படுகிறது. ஜீரோ நிறுவனத்தின் SR/F, SR/S ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் DSR/X எலெக்ட்ரிக் அட்வென்ச்சர் டூரர் மாடல்களிடையே ஒற்றுமைகள் உள்ள நிலையில், இவற்றிலும் புதிய கிளட்ச் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • டொயோட்டா ஹிலக்ஸ், இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஃபோர்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரேஞ்சர் மாடல் இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. இந்த கார் டிரக் ஒன்றின் மீது எடுத்துச் செல்லப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இத்துடன் ஃபோர்டு என்டேவர் மாடலும் காணப்பட்டது. இதே கார் சர்வதேச சந்தையில் ஃபோர்டு எவரஸ்ட் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இரு மாடல்களும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் ரேஞ்சர் மாடல் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படும் பிரபல எஸ்.யு.வி. ஆகும். இந்த மாடல் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     


    இந்த எஸ்.யு.வி. பெட்ரோல், டீசல் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ரேப்டர் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்டில் உள்ள 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 288 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ரேஞ்சர் எஸ்.யு.வி. மாடல் இதுவரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டதே இல்லை. எனினும், இந்த மாடலின் தோற்றம் கிட்டத்தட்ட ஃபோர்டு என்டேவர் எஸ்.யு.வி.-யை போன்றே காட்சியளிக்கிறது. ஒருவேளை இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுசு டி மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும்.

    ×