search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த யமஹா மோட்டார் இந்தியா
    X

    உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்த யமஹா மோட்டார் இந்தியா

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து இருப்பதை அறிவித்துள்ளது.



    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் ஒரு கோடி மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்திருக்கிறது. இந்தியாவில் யமஹா நிறுவனம் 1985 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. யமஹா நிறுவனம் இந்தியாவில் சென்னை, சுர்ஜாபூர் மற்றும் ஃபரிதாபாத் என மூன்று இடங்களில் உற்பத்தி ஆலைகளை இயக்கி வருகிறது.

    ஒரு கோடி யூனிட்டாக எஃப்.இசட். எஸ். எஃப்.ஐ. வெர்ஷன் 3.0 வெளியிடப்பட்டது. இது யமஹாவின் சென்னை ஆலையில் இருந்து வெளியானது. புதிய மைல்கல் நிகழ்வில் யமஹா மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    யமஹா மோட்டார் நிறுவனம் உற்பத்தி செய்திருக்கும் ஒரு யூனிட்களில் 80 சதவிகிதம் வாகனங்கள் யமஹாவின் சர்ஜாபூர் மற்றும் ஃபரிதாபாத் ஆலைகளில் இருந்து வெளியானவை ஆகும். மற்ற வாகனங்கள் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.



    "யமஹா நிறுவனம் இத்தனை ஆண்டுகள் கடந்த வந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது ஆகும். நாடு முழுக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அழகு, கவர்ச்சி என எங்களது வாகனங்களுக்கு இருக்கும் தட்டுப்பாடு மற்றும் யமஹா பிரபலத்தன்மையின் தொடர் வளர்ச்சிக்கு இந்த மைல்கல் சான்றாக அமைந்திருக்கிறது" என்று யமஹா மோட்டார்ஸ் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் மோடோஃபுமி ஷிதாரா தெரிவித்தார். 

    1985 முதல் 2019 வரை 34 ஆண்டு கால பயணத்தில் யமஹா நிறுவனம் பல்வேறு மைல்கல்களை கடந்து இருக்கிறது. 1999 ஆண்டில் யமஹா பத்து லட்சம் யூனிட்கள் உற்பத்தியை கடந்தது. பின் 13 ஆண்டுகள் கழித்து 2012 ஆம் ஆண்டு ஐம்பது லட்சம் யூனிட்கள் உற்பத்தியை பதிவு செய்தது.

    அந்த வகையில் தற்சமயம் ஒரு கோடி யூனிட்கள் உற்பத்தி மைல்கல் கடந்துள்ளது. யமஹாவின் சென்னை ஆலை இதன் உற்பத்தி திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    Next Story
    ×