புதுடெல்லி:
மாருதி சுசுகி செலரியோ ஃபேஸ்லிஃப்ட் இந்தி.யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய செலரியோ ஃபேஸ்லிஃப்ட் விலை இந்தியாவில் ரூ.4.15 லட்சத்தில் துவங்கி அதிபட்சம் ரூ.5.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட செலரியோ சுசுகி இந்தியாவில் 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதோடு, இந்தியாவில் ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி கொண்ட முதல் கார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிரபலமான ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் செலரியோ நான்கே ஆண்டுகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விற்பனையை கடந்துள்ளது.
புதிய ஃபேஸ்லிஃப்ட் செலரியோ புத்தம் புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட முன்பக்கம் பம்ப்பர், மெஷ் ஃபினிஷ் கிரில், புத்தம் புதிய ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் டெயில்கேட் புதிய கார்னிஷ், பின்புற பம்ப்பர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றங்கள் காரின் தோற்றததை அழகாக வெளிப்படுத்துகிறது.

உள்புற வடிவமைப்புகளை பொருத்த வரை செலரியோ மாடலின் கேபின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் சீட் டிரிம் புதிய பேட்டர்ன் கொண்டுள்ளதோடு, புதிய சீட் மற்றும் ஃபேப்ரிக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்தவகையில் புதிய செலரியோ மாடலிலும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜி்ன் 67bhp மற்றும் 90Nm செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் புதிய செலரியோ மாடலில் CNG கிட் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி பலேனோ, எஸ்-கிராஸ், எர்டிகா, இக்னிஸ், புதிய டிசையர் போன்று புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும் ஏழாவது மாருதி சுசுகி கார் ஆகும். இத்துடன் வழக்கமான பாதுகாப்பு அம்சங்களான டிரைவர்-சைடு ஏர் பேக், பாசென்ஜர் ஏர் பேக் மற்றும் ABS உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.