search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • வாகனங்களின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
    • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் எட்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய EMP திட்டம் காரணமாக மற்ற எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

    விலை குறைப்பு காரணமாக ஓலா நிறுவனத்தின் S1 X 2 கிலோவாட் ஹவர் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 69 ஆயிரத்து 999 என குறைந்து இருக்கிறது. S1 X 3 கிலோவாட் ஹவர் வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 84 ஆயிரத்து 999 என குறைந்துள்ளது.

     


    இந்த சீரிசில் டாப் எண்ட் S1 X 4 கிலோவாட் ஹவர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 99 ஆயிரத்து 999 என குறைந்தது. ஓலா S1 X சீரிஸ் மாடல்களின் வினியோகம் அடுத்த வாரம் முதல் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஓலா S1 X சீரிஸ் விலை குறைந்துள்ள நிலையில், S1 X பிளஸ், S1 ஏர் மற்றும் S1 ப்ரோ மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஓலா S1 X பிளஸ் மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்றும் S1 ஏர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம், S1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

    இந்திய சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் எட்டு ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் விலைகள் அனைத்தும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலிலும் வழங்கப்படும்.
    • ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்விப்ட் மாடல் YED எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய மாடலில் அதன் முந்தைய வெர்ஷனில் வழங்கப்பட்டதை விட அதிக அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடல் கார் ஏற்கனவே ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த கார் என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

     


    அதன்படி இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பலேனோ, பிரான்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா மாடல்களை போன்ற இன்டீரியர் புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    சர்வதேச சந்தையில் புதிய தலைமுறை ஸ்விப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள், டெயில் லைட்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், 16 இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் மற்றும் மடிக்கும் வசதி கொண்ட விங் மிரர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், டயர் பிரெஷர் மாணிட்டர், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி, ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ADAS போன்ற அம்சங்கள், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் டிபாச்சர் வார்னிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

    • வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டைகுன் மிட்சைஸ் எஸ்.யு.வி. மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.

    புதிய விலை குறைப்பை தொடர்ந்து இந்திய சந்தையில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடலின் விலை ரூ. 11 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறி இருக்கிறது. இந்த கார் மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     


    வோக்ஸ்வேகன் டைகுன் புதிய விலை விவரங்கள்:

    1.0 TSI கம்ஃபர்ட்லைன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ. 70 ஆயிரம் குறைந்து ரூ. 11 லட்சம் என மாறியுள்ளது

    1.5 TSI GT பிளஸ் DSG க்ரோம் ரூ. 75 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 69 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 TSI GT பிளஸ் DSG க்ரோம் (கூடுதல் அம்சங்களுடன்) ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 69 ஆயிரம் என மாறியது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG டீப் பிளாக் பியல் ரூ. 74 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG கார்பன் ஸ்டீல் கிரே மேட் ரூ. 80 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG (புதிய அம்சங்கள்) டீப் பிளாக் பியல் ரூ. 1 லட்சத்து 04 ஆயிரம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியது

    1.5 GT எட்ஜ் பிளஸ் DSG (புதிய அம்சங்கள்) கார்பன் ஸ்டீல் கிரே மேட் ரூ. 1.1 லட்சம் குறைந்து ரூ. 18 லட்சத்து 90 ஆயிரம் என மாறியுள்ளது

    இந்தியாவில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் ஐந்து பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது. டைகுன் மாடல் டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • இந்த மாடலில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் உள்ளது.
    • பின்புறம் 140 செக்ஷன் அகலமான டயர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் N250 மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்துள்ளது. புதிய 2024 பல்சர் N250 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 51 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட பாகங்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி 2024 பஜாஜ் பல்சர் N250 மாடலின் முன்புறம் 37mm அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மூன்று ஏ.பி.எஸ். மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்புறம் 140 செக்ஷன் அகலமான டயர் வழங்கப்பட்டு இருக்கிறது.


     

    இந்த மோட்டார்சைக்கிளின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மோட்டார்சைக்கிள் ரெட், வைட் மற்றும் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் ரெட் மற்றும் வைட் நிற வேரியண்டில் கோல்டு நிற ஃபோர்க்குகளும், பிளாக நிற வேரியண்டில் பிளாக் நிற ஃபோர்க்குகளும் வழங்கப்படுகின்றன.

    புதிய 2024 பஜாஜ் பல்சர் N250 மோட்டார்சைக்கிளில் 249சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.1 ஹெச்.பி. பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.

    • இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
    • டாடா பன்ச் EV மாடல் 315 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் எலெக்ட்ரிக் மாடலுக்கு முதல் முறையாக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், டாடா பன்ச் EV வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பன்ச் EV மாடலுக்கு முதல் முறையாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி டாடா பன்ச் EV டாப் எண்ட் மாடலுக்கு மட்டுமே ரூ. 50 ஆயிரம் சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகிறது.

     


    விற்பனையாகும் வேரியண்ட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு விற்பனை மையம் சார்பில் ரூ. 20 ஆயிரம் வரை தள்ளுபடி மற்றும் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காப்பீட்டு பலன்கள் வழங்கப்படுகின்றன.

    டாடா பன்ச் EV லாங் ரேன்ஜ் மாடலில் 35 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 421 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது.

    டாடா பன்ச் EV ஸ்டான்டர்டு மாடலில் 25 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றிருக்கிறது.

    • வாரண்டியை நீட்டிக்க ஏராளமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
    • ஏற்கனவே வழங்கி வந்ததை விட எட்டு மடங்கு அதிகம்.

    அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் F77 மோட்டார்சைக்கிள் மாடலுக்கு புதிதாக பேட்டரி வாரண்டிகளை அறிவித்து இருக்கிறது. புதிய வாரண்டி திட்டத்தின் கீழ் அல்ட்ராவொய்லெட் F77 வாங்குவோர் அதன் பேட்டரியின் வாரண்டியை நீட்டிக்க ஏராளமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    இதற்காக அல்ட்ராவொய்லெட் நிறுவனம் UV கேர், UV கேர் பிளஸ் மற்றும் UV கேர் மேக்ஸ் என மூன்று வாரண்டி திட்டங்களை அறிவித்து இருக்கிறது. இவற்றில் முதல் இரண்டு வாரண்டி திட்டங்களுக்கு முறையே 60 ஆயிரம் மற்றும் 1 லட்சம் கிலோமீட்டர்கள் வரையிலான வாரண்டி வழங்கப்படுகிறது.

     


    முன்னதாக இவற்றில் 30 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரையிலான வாரண்டியே வழங்கப்பட்டது. புதிய UV கேர் மேக்ஸ் திட்டத்தின் கீழ் பேட்டரிக்கான வாரண்டி 8 லட்சம் கிலோமீட்டர்கள் அல்லது எட்டு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கி வந்ததை விட எட்டு மடங்கு அதிகம் ஆகும்.

    ஏற்கனவே F77 மாடலை பயன்படுத்துவோரும் இந்த திட்டங்களை வாங்க முடியுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும், புதிய வாரண்டி திட்டங்களின் விலையும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    • மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
    • இது மஹிந்திரா XUV 300 காரின் பேஸ்லிப்ட் வெர்ஷன் ஆகும்.

    மஹிந்திரா நிறுவனம் இம்மாத இறுதியில் (ஏப்ரல் 29) தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் XUV 3XO அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த காருக்கான டீசர்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் மஹிந்திரா XUV 3XO மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என்றும் இவை அதிகாரப்பூர்வமாக நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    புதிய XUV 3XO மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் XUV 300 காரின் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் பெயர் மட்டுமின்றி டிசைன் அடிப்படையிலும் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் மெல்லிய கிரில், இன்வெர்ட் செய்யப்பட்ட சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், டூயல் பாரெல் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டுவீக் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்படுகிறது.

    இதன் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. டெயில் லைட், மஹிந்திராவின் டுவின் பீக் லோகோ மற்றும் XUV 3XO பிராண்டிங் வழங்கப்படுகிறது. இந்த காரில் முற்றிலும் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஏழு ஏர்பேக், லெவல் 2 ADAS சூட் வழங்கப்படுகிறது. இத்துடன் வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பவர்டு டிரைவர் சீட், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங் வழங்கப்படுகிறது. 

    • கியா EV9 மாடல் விரைவில் இந்தியா வரவிருக்கிறது.
    • 6 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்கிறது.

    கியா நிறுவனம் தனது சர்வதேச யுத்தியின் அங்கமாக இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இரண்டு புதிய வாகனங்களில் ஒன்று கியா கரென்ஸ் EV மற்றொன்று முற்றிலும் புது எலெக்ட்ரிக் கார் ஆகும். கியா முதலீட்டாளர்கள் தினம் 2024 நிகழ்வில் இது தொடர்பான தகவல்களை அந்நிறுவன தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹோ சுங் சாங் உறுதிப்படுத்தினார்.

     


    இவைதவிர கியா EV9 மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    "எலெக்ட்ரிக் வாகன சந்தையின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கியா நிறுவனம் 2026 ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும். 2024 ஆண்டிலேயே EV3, இதைத் தொடர்ந்து EV2, EV4 மற்றும் EV5 போன்ற மாடல்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது."

    "வளர்ந்து வரும் சந்தைகளில் இரண்டு மாடல்கள் அப்பகுதிக்கு ஏற்ற வகையிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் இந்த வரிசையில் கியா கரென்ஸ் EV மாடல் அறிமுகம் செய்யப்படும்," என்று ஹோ சுங் சாங் தெரிவித்தார். 

    • ஏத்தர் ரிஸ்டா மாடல் நான்கு டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த மாடலில் PMSM எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஏத்தர் கம்யூனிட்டி டே 2024 நிகழ்ச்சியில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் இரண்டு மாடல்கள் மற்றும் ஏழு வெவ்வேறு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. புதிய ஏத்தர் ரிஸ்டா மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஏத்தர் ரிஸ்டா S மாடல் மூன்று மோனோடோன் நிறங்களிலும், ரிஸ்டா Z ஏழு நிறங்கள்- மூன்று மோனோடோன், நான்கு டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மோனோடோனில் பாங்காங் புளூ, சியாசென் வைட் மற்றும் டெக்கான் கிரே ஆப்ஷன்களும், டூயல் டோனில் பாங்காங் புளூ-வைட், கார்டமம் கிரீன்-வைட், அல்போன்சே எல்லோ-வைட், டெக்கான் கிரே-வைட் போன்ற ஆப்ஷன்கள் உள்ளன.

     


    ஏத்தர் ரிஸ்டா மாடலில் PMSM எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 5.76 ஹெச்.பி. பவர், 22 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் அனைத்து வேரியண்ட்களும் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும்.

    புதிய ரிஸ்டா S மற்றும் ரிஸ்டா Z வேரிண்ட்களில் முறையே 2.9 கிலோவாட் ஹவர் மற்றும் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவை முறையே 123 மற்றும் 160 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளன.

    இதன் 2.9 கிலோவாட் ஹவர் மாடலில் 350 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது பேட்டரியை 6 மணி 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும். முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணி 30 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும்.

    3.7 கிலோவாட் ஹவர் வேரியண்ட் உடன் 700 வாட் ஏத்தர் டுயோ சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 4 மணி 30 நிமிடங்களில் 80 சதவீதம் வரையிலும், 6 மணி 10 நிமிடங்களில் முழுமையாகவும் சார்ஜ் செய்துவிடும். புதிய ரிஸ்டா மாடலில் அண்டர்போன் சேசிஸ், நீளமான சப் ஃபிரேம், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. 

    • அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.
    • கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

    மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இந்த காருக்கான தட்டுப்பாடு இன்றும் குறையாத நிலையே தொடர்கிறது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N மாடலின் 2023 வெர்ஷனுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.

    அதன்படி ஸ்கார்பியோ N மாடலின் டாப் எண்ட் Z8 மற்றும் Z8L டீசல் 4x4 வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட 7 சீட்டர் வேரியண்ட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. Z8 மற்றும் Z8L டீசல் 4x2 AT வேரியண்ட்களுக்கு (6 மற்றும் 7 சீட்டர்) ரூ. 60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     


    ஸ்கார்பியோ N Z8 மற்றும் Z8L பெட்ரோல் AT வேரியண்ட்களுக்கும் (6 மற்றும் 7 சீட்டர்) ரூ. 60 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி தவிர எக்சேன்ஜ் போனஸ் அல்லது கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை.

    இந்திய சந்தையில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் 203 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 175 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஸ்கார்பியோ N மாடல் ரூ. 13 லட்சத்து 60 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 24 லட்சத்து 54 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • இந்த பைக்கின் முந்தைய வெர்ஷன் விலையும் இது தான்.
    • மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஜப்பானை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான கவாசகி தனது வெர்சிஸ் 650 ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார்சைக்கிளின் 2024 வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2024 வெர்சிஸ் 650 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக்கின் முந்தைய வெர்ஷன் விலையும் இது தான்.

    2024 மாடலில் நிறங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் மாற்றப்பட்டு, பைக் சற்றே புதுப்பிக்கப்பட்ட தோற்றம் பெற்றிருக்கிறது. 2024 கவாசகி வெர்சிஸ் 650 மாடல் மெட்டாலிக் மேட் டார்க் கிரே / எபோனி மற்றும் மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக் / கேண்டி லைம் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கின் மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    அந்த வகையில், வெர்சிஸ் 650 மாடலில் ஒரே டிசைன், எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்டேஷன், 2 லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., லாங்-டிராவல் சஸ்பென்ஷன், 17 இன்ச் வீல்கள், அப்ரைட் சீட்டிங் போன்ற வசதிகள் அப்படியே வழங்கப்பட்டு உள்ளன.

    பவர்டிரெயினை பொருத்தவரை இந்த மாடலில் 649சிசி, லிக்விட் கூல்டு பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 65 ஹெச்.பி. பவர், 61 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.
    • புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை முதல் முறையாக வெளியிட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் ஏப்ரல் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    மேம்பட்ட புதிய சப்-4 மீட்டர் எஸ்.யு.வி. மாடலுக்கு மஹிந்திரா XUV 3XO என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் ஒட்டுமொத்த XUV மாடல்களும் இதே போன்ற பெயர்கள் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.

    டீசரில் புதிய மஹிந்திரா XUV 3XO மாடலின் முன்புறம் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், எல் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், புதிய பேட்டன் கொண்ட கிரில், டூயல் டோன் அலாய் வீல்கள் உள்ளன.

    இத்துடன் புதிதாக சி வடிவம் கொண்ட எல்.இ.டி. டெயில் லைட்கள், கனெக்டெட் எல்.இ.டி. லைட் பார், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், பின்புறத்தில் XUV 3XO லெட்டரிங் உள்ளது. இவைதவிர டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புதிய ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய மஹிந்திரா XUV 3XO மாடலிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட்கள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் அறிமுகமானதும் மஹிந்திரா XUV 3XO கார், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்சான், கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.

    ×