search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக்
    X

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக்

    ஜீப் இந்தியாவின் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Jeep



    ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. டிரெயில்ஹாக் வேரியண்ட் ஜீப் காம்பஸ் காரின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருக்கிறது. இந்தியாவில் இந்த கார் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஜீப் பிரியர்கள் மற்றும் ஆஃப்-ரோடர்களுக்கு டிரெயில்ஹாக் வேரியண்ட் பிடித்தமான காராக இருக்கும். இந்தியாவில் ஜீப் காம்பஸ் கார் 2017 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அறிமுகமானது முதல் ஜீப் காம்பஸ் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

    தொடர்ந்து இந்த காரின் விற்பனையை அதிகரிக்க ஜீப் இந்தியா புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜீப் காம்பஸ் டிரெயிட்ஹாக் வேரியண்ட் பூனேவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புதிய ஜீப் கார் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பது தெளிவாக கவனிக்க முடிகிறது.



    ஜீப் காம்பஸ் மற்ற வேரிண்ட்களை போன்றே டிரெயில்ஹாக் வேரியண்ட் காட்சியளிக்கிறது. இதனை வித்தியாசப்படுத்தும் ஒரே அம்சமாக இதன் வீல்பேஸ் உயரம் மற்றும் டிரெயில்ஹாக் பேட்ஜ் உள்ளிட்டவற்றை கூறலாம். சோதனை செய்யப்படும் டிரெயில்ஹாக் மாடலில் டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் புதிய காரின் பம்ப்பர் மாற்றப்பட்டிருப்பது தெரிகிறது. பின்புற பம்ப்பரில் டோ செய்வதற்கென ஹூக் காணப்படுகிறது. சோதனையில் சிக்கிய டிரெயில்ஹாக் எஸ்.யு.வி. டூயல்-டோன் வேரியண்ட் ஆகும். இதன் உள்புறங்கள் காம்பஸ் காரின் மற்ற வேரியண்ட்களை போன்று காட்சியளிக்கிறது. 

    ஜீப் காம்பல் டிரெயில்ஹாக் பெரிய MID மற்றும் குரூஸ் கண்ட்ரோல் வசதிகளை கொண்டிருக்கும். இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் லிமிட்டெட் பிளஸ் வேரியண்ட்டில் இருந்து எடுக்கப்படுகிறது. இதன் 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    புதிய டிரெயில்ஹாக் கார் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 170 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டிரெயில்ஹாக் மாடலில் இந்த என்ஜின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.

    புகைப்படம் நன்றி: Zigwheels
    Next Story
    ×