search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சோதனையில் சிக்கிய 2019 டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்
    X

    சோதனையில் சிக்கிய 2019 டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2019 டாடா டிகோர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. #TataTigor



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2019 டாடா டிகோர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சோதனை செய்யப்படும் காம்பேக்ட் செடான் மாடல் கார் உற்பத்திக்கு தயார்நிலையில் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது.

    புதிய டிகோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரின் முன்புறம் முந்தைய மாடலை விட கூர்மையாக்கப்பட்டுள்ளது. இது டாடாவின் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகியிருக்கிறது. டாடாவின் ஹேரியர் மற்றும் அல்ட்ராஸ் போன்ற கார்களும் இதேபோன்ற வடிவமைப்பிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

    காரின் மற்ற மாற்றங்களை பொருத்தவரை ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களும் புதிய வடிவமைப்பை கொண்டிருக்கின்றன. இத்துடன் புதிய காரின் சேசிஸ் மேலும் உறுதியாக்கப்பட்டிருக்கிறது.



    இவற்றுடன் ஏ.பி.எஸ். மற்றும் டூயல் ஏர்பேக் கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், உள்புறம் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்கானிக்கல் ரீதியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.

    அந்த வகையில் புதிய டிகோர் மாடலிலும் 1.2 லிட்டர் ரெவோடிரான் மோட்டார் வழங்கப்படலாம். இந்த மோட்டார் 85 பி.எஸ். பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது லிட்டருக்கு 23.84 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 1047சிசி டர்போசார்ஜ் செய்யப்பட்ட ரெவோடார்க் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த என்ஜின் 70 பி.எஸ். / 140 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது லிட்டருக்கு 27.28 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    புகைப்படம் நன்றி: Overdrive
    Next Story
    ×