search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட்
    X

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹிந்திரா டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட்

    மஹிந்திரா நிறுவனத்தின் டு.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #Mahindra #TUV300Facelift



    மஹிந்திரா நிறுவனம் தனது டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் காரினை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. புதிய டி.யு.வி.300 விரைவில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய யு.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூடுதல் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், மஹிந்திரா தனது டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் காரை சோதனை செய்கிறது.

    எனினும், காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. அந்த வகையில் டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மெல்லிய ரூஃப் ரெயில்கள், பின்புறம் புதிதாக கூடுதல் டையர் வைக்கும் பகுதி, மேம்பட்ட பின்புற பம்ப்பர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    இதுதவிர புதிய மஹிந்திரா டி.யு.வி.300 காரில் மேம்பட்ட புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், புதிய அலாய் வடிவமைப்பு, மேம்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் மற்றும் மேம்பட்ட முன்பக்க கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மஹிந்திரா டி.யு.வி.300 மாடலில் பாதுகாப்பு மற்றும் கிராஷ் டெஸ்ட் சோதனைகளில் வெற்றிப்பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.


    புகைப்படம் நன்றி: The Next COG

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை மஹிந்திரா டி.யு.வி. 300 ஃபேஸ்லிஃப்ட் மாடலில்: ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பின்புறம் ரியர்வியூ பார்க்கிங் சென்சார்/கேமரா, முன்பக்கம் டூயல் ஏர்பேக், ஹை-ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், சீட்பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஐசோஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மெக்கானிக்கல் ரீதியில் புதிய டி.யு.வி.300 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மஹிந்திரா சமீபத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்.யு.வி.300 மாடலில் வழங்கிய என்ஜினை வழங்குகிறது. எனினும், இதுபற்றி மஹிந்திரா சார்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. மஹிந்திரா 
    டி.யு.வி.300 மாடலில் 1.5 லிட்டர், 3-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. மற்றும் 240 என்.எம். டார்க் செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கிறது.

    மஹிந்திரா எக்ஸ்,யு.வி.300 மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. மற்றும் 3000 என்.எம். டார்க் செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது.
    Next Story
    ×