search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இணையத்தில் லீக் ஆன ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் காப்புரிமை புகைப்படங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் காப்புரிமை புகைப்படங்கள்

    ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #RenaultKwid #ElectricCar



    ரெனால்ட் நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கி விருகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் புதிய க்விட் எலெக்ட்ரிக் காரின் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் முதல் முறையாக லீக் ஆகியுள்ளது. இதில் புதிய எலெக்ட்ரிக் காரின் வெளிப்புற மாற்றங்கள் தெரியவந்துள்ளது.

    ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அந்நிறுவனம் 2018 பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்த K-ZE கான்செப்ட் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. முதற்கட்டமாக இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடல் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் சென்னையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றாலும், இதன் மோட்டார் சீனாவில் பொருத்தப்படுகிறது.

    இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகமாக இன்னும் சிலகாலம் ஆகும் என்றே தெரிகிறது. இந்திய அரசு எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு பற்றி தெளிவற்ற நிலைப்பாட்டில் இருப்பதாலேயே எலெக்ட்ரிக் வெர்ஷன் தாமதமாக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காப்புரிமை புகைப்படங்களின் படி க்விட் எலெக்ட்ரிக் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை.



    எனினும், காரின் முன்பக்கம் புதிய கிரில் வடிவமைப்பு, ஹெட்லேம்ப் கிளஸ்டர் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனம் என்ற வகையில், க்விட் இ.வி. காரின் முன்பக்க பம்ப்பரில் சென்ட்ரல் ஏர் டேம் காணப்படவில்லை. புதிய ஹெட்லேம்ப் கிளஸ்டரில் எல்.இ.டி. யூனிட்கள் மற்றும் டி.ஆர்.எல்.கள் வழங்கப்படும் என தெரிகிறது.

    காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறம் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் அப்டேட் செய்யப்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. காரின் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கள் வழங்கப்படலாம் என்றும், க்விட் இ.வி. காரினை சீன ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. 

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் க்விட் இ.வி. திறன் சார்ந்த தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×