search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்திய விற்பனையாளர்களிடம் டியூக் 790 - விரைவில் அறிமுகமாகும் என தகவல்
    X

    இந்திய விற்பனையாளர்களிடம் டியூக் 790 - விரைவில் அறிமுகமாகும் என தகவல்

    கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிள் விற்பனை மையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. #Duke790 #Motorcycle



    கே.டி.எம். இந்தியா விரைவில் தனது டியூக் 790 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 2019 டியூக் 790 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனை மையங்களில் முதல்முறையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதன் அறிமுகம் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய டியூக் 790 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் புதிய 2019 டியூக் 790 மோட்டார்சைக்கிள் பல்சர் மாடலின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 

    மற்றொரு புகைப்படங்களில் டியூக் 790 பின்னணியில் கே.டி.எம். பேனர் காணப்படுகிறது. டியூக் 790 மோட்டார்சைக்கிளில் 799சிசி LC8c பேரலெல்-ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 85 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, எல்.இ.டி. ஹெட்லைட், கார்னெரிங் ஏ.பி.எஸ்., க்விக் ஷிஃப்டர், ரைடு-பை வையர், டி.சி.எஸ். மற்றும் லான்ச் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. கே.டி.எம். டியூக் 790 மோட்டார்சைக்கிளுக்கான பாகங்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு பஜாஜ் ஆட்டோவின் சக்கன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது. 


    புகைப்படம் நன்றி: maxabout

    தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் கே.டி.எம். மாடல்கள் இதே தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய டியூக் 790 அறிமுகத்திற்காக இந்திய கே.டி.எம். ப்ரியர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் நிலையில், இதன் விலை நிச்சயம் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    மார்ச் 2019இல் புதிய டியூக் 790 அறிமுகமாகும் என்றும் இதன் விலை ரூ.8.0 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கே.டி.எம். நிறுவனம் விரைவில் 500சிசி பேரலெல் ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது.

    சமீபத்தில் வெளியான தகவல்களில் கே.டி.எம். இந்தியா விற்பனையாளர்கள் புதிய டியூக் 790 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டியூக் 790 முன்பதிவு கட்டணம் ரூ.10,000 என்றும் இத்தொகை திரும்ப வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×