search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் வெளியாகும் ஃபோர்டு இகோஸ்போர்ட் டைட்டானியம் எஸ்
    X

    விரைவில் வெளியாகும் ஃபோர்டு இகோஸ்போர்ட் டைட்டானியம் எஸ்

    ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் இகோஸ்போர்ட் புதிய வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஃபோர்டு இந்தியா நிறுவனம் இகோஸ்போர்ட் புதிய வேரியண்ட் மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இகோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் என அழைக்கப்பட இருக்கும் புதிய மாடலில் பெரும்பாலான டாப் எண்ட் அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய இகோஸ்போர்ட் புகைப்படங்கள் டீம் பிஹெச்பி மூலம் வெளியாகியுள்ளது. கேரளா விற்பனையாளரிடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சன்ரூஃப், கருப்பு நிற இன்டீரியர் தவிர புதிய மாடலில் சில காஸ்மெடிக் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    ஃபோர்டு இகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு ஆம்பியன்ட், டிரெண்ட், டிரெண்ட் பிளஸ், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் பிளஸ் என ஐந்து வித வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் விரைவில் வெளியிடப்பட இருக்கும் மாடல் ஆறாவது வேரியண்ட் ஆக இருக்கும்.

    புதிய டைட்டானியம் எஸ் வேரியண்ட் வெளிப்புறத்தில் ஸ்மோக் எஃபெக்ட் செய்யப்பட்ட ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப் (DRL), பிளாக் ரூஃப் ரெயில்கள், ஃபாக் லேம்ப்களை சுற்றி பிளாக் கிளாடிங், ஸ்போர்ட் தோற்றம் கொண்ட புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. 


    புகைப்படம்: நன்றி Team BHP

    பின்புறம் பிளாக் ரூஃப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி பிரேக் லைட் மற்றும் டைட்டானியம் எஸ் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டுகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உள்புறம் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு, டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், டோர் பேனல்கள் மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவற்றில் ஆரஞ்சு நிற ஹைலைட் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் எலெக்ட்ரானிக் சன்ரூஃப், மிதக்கும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ஃபோர்டு சின்க் 3 உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் 3-ஸ்போக் மல்டிபங்ஷன் ஸ்டீரிங் வீல் போன்றவை ஸ்டான்டர்டு மாடலில் இருந்தபடியே வழங்கப்பட்டுள்ளது.

    ஃபோர்டு இகோஸ்போர்ட் டைட்டானியம் எஸ் வேரியண்ட் 1.5 லிட்டர் TDCi டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 99 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்கியூ செய்லதிறன் வழங்குகிறது. இத்துடன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 123 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இரண்டு இன்ஜின்களிலும் ஆட்டோமேடிக் அல்லது மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
    Next Story
    ×