search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் i30
    X

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் i30

    ஹூன்டாய் நிறுவனத்தின் i30 ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த மாடல் ஐரோப்பியா நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது.
    சென்னை:

    ஹூன்டாய் நிறுவனத்தின் i30 ஹேட்ச்பேக் மாடல் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவில் விரைவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஹூன்டாய் எலான்ட்ரா மாடலை சார்ந்து உள்புறம் அதிக இடவசதியை வழங்குகிறது. இந்தியாவில் ஹூன்டாய் i30 சோதனை செய்யப்படுவது முதல் முறையாக தெரியவந்துள்ளது. இதன் புதிய தலைமுறை மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஹேட்ச்பேக் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. உள்புறம் 8.0 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ரேடார்-கைடடு க்ரூஸ் கண்ட்ரோல், எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்டிருக்கிறது.



    புகைப்படம்: நன்றி AutoCarIndia

    அளவில் பெரியதாக இருக்கும் புதிய கார் வாங்குவோர் அதிகளவு வரி செலுக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் ஹூன்டாய் அனைத்து ரகங்களிலும் கார்களை விற்பனை செய்து வருகிறது. புதிய i30 விலை ரூ.8 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக ஹூன்டாய் அறிமுகம் செய்த வெர்னா மாடலின் துவக்க விலை ரூ.8.7 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இத்தகைய விலை கொடுப்பவர்கள் பெரும்பாலும் ஹேட்ச்பேக் மாடல்களை விட செடான் மாடலையே தேர்வு செய்கின்றனர். ஹேட்ச்பேக் மாடல்களை விட செடான் மாடல்கள் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட்டஸ் அடையாளத்தை அதிகரிக்கும்.

    ஹூன்டாய் i30 மாடல் தற்சமயம் வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்தியா போன்ற சந்தைகளில் இந்த மாடல் வெற்றியடைவது சிரமமான காரியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்சமயம் சோதனை செய்யப்படும் i30 மாடல் ஹேட்ச்பேக் மாடல்களின் எதிர்கால வளர்ச்சிக்காக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுதவிர புதிய மாடல்கள் சர்வதேச மாடல்களை புரிந்து கொள்ளவோ அல்லது ஹூன்டாய் நிறுவன அதிகாரிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
    Next Story
    ×