search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்
    X

    ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்

    ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.
    புதுடெல்லி:

    ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. டீம் பி.ஹிச்.பி. மூலம் வெளியாகி இருக்கும் 2018 க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்களில் புதிய காரின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் புதிய காரின் முன்பக்கம் புதிய கிரில் வடிவமைப்பு, புதிய பம்ப்பர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஃபாக் லேம்ப், பம்ப்பரில் எல்இடி டி.ஆர்.எல். வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


    புகைப்படம்: நன்றி டீம் பி.ஹெச்.பி.

    ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டா மாடலில் டூயல் டோன் அலாய் வீல், கண்ணாடியின் கீழ் க்ரோம் பெல்ட் வழங்கப்படுகிறது. பின்புறம் மேம்படுத்தப்பட்ட டெயில் லைட், அப்டேட் செய்யப்பட்ட பம்ப்பர், உள்புறம் மேம்படுத்தப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    தற்போதைய மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் A1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 123 பி.ஹெச்.பி. பவர், 151 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர் மற்றொரு 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் 126 பி.ஹெச்.பி. பவர் வழங்கப்படுகிறது. இவை 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×