என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இணையத்தில் லீக் ஆன அடுத்த தலைமுறை வால்வோ எஸ்60
Byமாலை மலர்11 March 2018 11:34 AM GMT (Updated: 11 March 2018 11:34 AM GMT)
வால்வோ எஸ்60 செடான் மாடல் கார் அடுத்த தலைமுறை மாடலின் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது.
புதுடெல்லி:
வால்வோ நிறுவனத்தின் புதிய வி60 வேகன் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வால்வோ எஸ்60 மாடலின் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது.
வால்வோ பிரிவில் 18 ஆண்டுகள் மற்றும் மூன்று தலைமுறைகளாக விற்பனை செய்யப்படும் செடான் மாடலாக எஸ்60 இருக்கிறது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று எஸ்60 மாடல் பெரியதாகவே காட்சியளிக்கிறது. ஸ்பை படத்தில் காரின் பின்புறம் மட்டும் காட்சியளிக்கிறது.
புகைப்படம்: நன்றி Teknikens Varld
முன்பக்கம் சிக்னேச்சர் கிரிள், முன்பக்கம் லீனிங் சில்ஹௌட் மற்றும் சுத்தியல் போன்ற டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய எஸ்60 மாடலின் இன்ஜின் அம்சங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் 4-சிலிண்டர் இன்ஜின்கள் மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டு 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×