search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இணையத்தில் கசிந்த தண்டர்பேர்டு 350X மற்றும் 500X விவரங்கள்
    X

    இணையத்தில் கசிந்த தண்டர்பேர்டு 350X மற்றும் 500X விவரங்கள்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு 350X மற்றும் 500X மோட்டார்சைக்கிள்களின் விளம்பர நோட்டீஸ் இணையத்தில் கசிந்திருக்கிறது.
    புதுடெல்லி:

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு 350X மற்றும் 500X மோட்டார்சைக்கிள்களின் விளம்பர நோட்டீஸ் இணையத்தில் கசிந்திருக்கிறது. இரண்டு மோட்டார்சைக்கிள்களின் வெளியீட்டை சமீபத்தில் உறுதி செய்த நிலையில் இணையத்தில் கசிந்திருக்கும் விNம்பர நோட்டீஸ் மோட்டார்சைக்கிள்களின் விவரங்களை வெளிப்படுத்தி இருக்கிறது. 

    ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு X மாடல்கள் விம்சிகல் வைட், ட்ரிஃப்டர் புளூ, கெட்அவே ஆரஞ்சு மற்றும் ரோவிங் ரெட் உள்ளிட்ட நான்கு நிறங்களில் கிடைக்கும். புதிய மோட்டார்சைக்கிள்களின் கவர்ச்சிகர நிறம், ஸ்டைலிங் சீட் மற்றும் ரிம்களுடன் இணைக்கப்படுகிறது.   

    தண்டர்பேர்டு 350X மற்றும் 500X மோட்டார்சைக்கிள்களும் அடிப்படையில் கருப்பு நிறமும் டூயல்-டோன் பெயிண்டிங் செய்யப்படுகிறது. இவற்றின் ஃபியூயல் டேன்க் கவர்ச்சிகர நிறமும் இன்ஜின், எக்சாஸ்ட் மற்றும் அலாய் வீல்களில் கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. 



    புதிய டூயல்-டோன் பெயிண்டிங் வாகனத்திற்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. அந்த வகையில் தண்டர்பேர்டு X மோட்டார்சைக்கிள் மாடல்கள் இளைய தலைமுறையினரை குறிவைத்து வெளியிடப்பட இருக்கிறது. இத்துடன் அகலமான ஹேண்டில்பார் வழங்கப்பட்டிருக்கிறது. இது முந்தைய க்ரூசர் மற்றும் வழக்கமான மாடல்களை விட வித்தியாசமான தோற்றத்தை வழங்குகிறது.

    இதுதவிர முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட கிராப் ரெயில்கள் X ரக மோட்டார்சைக்கிளின் சீட் வடிவமைப்புடன் கச்சிதமாக பொருந்துகிறது. கூடுதலாக அலாய் வீல்களும், ரிம்களை சுற்றி ஸ்டிக்கரிங் செய்யப்பட்டிருக்கிறது. வாகனத்தில் தண்டர்பேர்டு பெயர் சிறியதாகவும், 350X அல்லது 500X வார்த்தைகள் பிரகாசமாகவும் காட்சியளிக்கிறது. 

    வழக்கமான மாடல்களை போன்றே புதிய தண்டர்பேர்டு X மாடலிலும் ஒரே இன்ஜின்கள் வழங்கப்படுகிறது. தண்டர்பேர்டு 500X மாடலில் 499சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 27.2 பி.ஹெச்.பி. பவர், 41.3 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. தண்டர்பேர்டு 350X மாடலில் 346சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது.
    Next Story
    ×