search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கோப்பு படம்: டி.வி.எஸ். ஸ்போர்ட்
    X
    கோப்பு படம்: டி.வி.எஸ். ஸ்போர்ட்

    லிட்டருக்கு 95 கிலோமீட்டர் - விரைவில் வெளியாகும் டி.வி.எஸ். பிரெஸ்டிஜ்

    டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் 100சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சென்னையை சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனம் விரைவில் புதிய 100 சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய டி.வி.எஸ் 100 சிசி மோட்டார்சைக்கிள் பிரெஸ்டிஜ் என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    தற்சமயம் விற்பனை செய்யப்படும் டி.வி.எஸ். ஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் இன்ஜின் டி.வி.எஸ். பிரெஸ்டிஜ் மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. டி.வி.எஸ். ஸ்போர்ட் மாடலில் 99.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், கார்புரேட்டெட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 7.4 பி.எஸ் @ 7500 ஆர்.பி.ம். பவர் மற்றும் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    இந்த இன்ஜின் லிட்டருக்கு 95 கிலோமீட்டர் வரை செல்லும் என டி.வி.எஸ். தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய டி.வி.எஸ். பிரெஸ்டிஜ் இதே அளவு மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கும் டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் அந்நிறுவன தயாரிப்பு ஆலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் லிட்டருக்கு 95 கிலோமீட்டர் வரை சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்: டி.வி.எஸ். ஸ்போர்ட்

    புதிய பிரெஸ்டிஜ் மாடலில் சௌகரிய அனுபவத்தை வழங்கும் மென்மையான சீட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட இருக்கிறது. இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக் வழங்கப்படுகிறது. டி.வி.எஸ். பிரெஸ்டிஜ் 100சிசி மோட்டார்சைக்கிள் விலை தற்போதைய ஸ்போர்ட் மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் டி.வி.எஸ். ஸ்போர்ட் விலை ரூ.38,513 முதல் துவங்குகிறது, டி.வி.எஸ். பிரெஸ்டிஜ் மாடலின் துவக்க விலை ரூ.45,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.50,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் டி.வி.எஸ். பிரெஸ்டிஜ் மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையில் ஹோன்டா டிரீம் மற்றும் ஹீரோ டான் சேலஞ்சர் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×