search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் இந்தியா வரும் அவென்ஜர் 180 - முன்பதிவு துவங்கியது
    X

    விரைவில் இந்தியா வரும் அவென்ஜர் 180 - முன்பதிவு துவங்கியது

    பஜாஜ் அவென்ஜர் 180 மோட்டார்சைக்கிள் முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது. இதன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பஜாஜ் அவென்ஜர் 180 க்ரூசர் மோட்டார்சைக்கிளின் விலை மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது. அதன்படி பஜாஜ் அவென்ஜர் 180 க்ரூசர் விலை ரூ.83,400 (எக்ஸ்-ஷோரூம், மும்பை) முதல் துவங்கலாம் என கூறப்படுகிறது. இது பஜாஜ் அவென்ஜர் 220 மாடலை விட விலை குறைவு ஆகும்.

    புதிய பஜாஜ் அவென்ஜர் 180 மாடலுக்கான முன்பதிவு பஜாஜ் விற்பனை மையங்களில் துவங்கியுள்ளது. இதன் விநியோகம் இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவென்ஜர் 150 மற்றும் 220 சிசி மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

    பஜாஜ் அவென்ஜர் 180 மோட்டார்சைக்கிள் சமீபத்தில் வெளியிடப்பட்ட சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலுக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. புதிய அவென்ஜர் 180 மாடலில் 180 சிசி, 4-ஸ்டிரோக் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே இன்ஜின் பல்சர் 180 DTSi மாடலில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


    புகைப்படம்: நன்றி திரஸ்ட்சோன்

    பல்சர் மோட்டார்சைக்கிளில் இந்த இன்ஜின் 17 பி.ஹெச்.பி. பவர், 14.2 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கார்புரேட்டெட் இன்ஜின் வகையை சார்ந்து இருப்பதோடு, ஃபியூயல் இன்ஜெக்ஷன் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. புதிய அவென்ஜரில் செயல்திறன் அளவில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.

    வடிவைப்பை பொருத்த வரை அவென்ஜர் 180 மாடல் ஏற்கனவே வெளியிடப்பட்ட 2018 அவென்ஜர் 220 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிளாக்டு-அவுட் இன்ஜின், அலாய் வீல், ஹெட்லேம்ப்-ஐ சுற்றி கௌல், எக்சாஸ்ட்-க்கு மேட் பிளாக் ஃபினிஷ், புதிய சீட் மற்றும் கிராப்-ரெயில் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 

    எனினும் அவென்ஜர் 220 ஸ்ட்ரீட் போன்று புதிய அவென்ஜர் 180 மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படாமல் வழக்கமான அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களான முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் கேஸ்-சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    முன்பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய மாடலில் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    Next Story
    ×