search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் டி.வி.எஸ். டேஸ்
    X

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் டி.வி.எஸ். டேஸ்

    டி.வி.எஸ். நிறுவனத்தின் டேஸ் ஸ்கூட்டர் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.
    புதுடெல்லி:

    டி.வி.எஸ். நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் இந்த ஆண்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை கசிந்துள்ள புகைப்படம் டேஸ் ஸ்கூட்டர் பெங்களூருவில் சோதனை செய்யப்படுவது தெரியவந்திருக்கிறது.

    டி.வி.எஸ். டேஸ் ஸ்கூட்டர் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் டி.வி.எஸ். டேஸ் ஸ்கூட்டர் ஏற்கனவே தென்கிழக்கு ஆசிய சந்தைகளான இந்தோனேஷியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது. டேஸ் கார்புரேட்டெட் மற்றும் ஃபியூயல் இன்ஜெக்டெட் என இரண்டு வித ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

    இந்திய சந்தையை கருத்தில் கொண்டு இந்த மாடலின் ஃபியூல் இன்ஜெக்டெட் பதிப்பு வெளியிடப்படாது என்றே கூறப்படுகிறது. டேஸ் ஸ்கூட்டர் 110 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 8.57 பி.எச்.பி. பவர் 7500 ஆர்.பி.எம். மற்றும் 8.3 என்.எம். டார்கியூ 5500 ஆர்.பி.எம். வழங்குகிறது. ஆட்டோமேடிக் ஸ்கூட்டர்களில் பொதுவாக வழங்கப்படும் சி.வி.டி. யுனிட் வழங்கப்படுகிறது.



    முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பு, 14 இன்ச் வீல், முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன்பக்கம் 200 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் செட்டப், பின்புறம் 130 மி்ல்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டிருக்கிறது. 93 கிலோ எடை கொண்டிருப்பதால் டேஸ் ஸ்கூட்டர் குறைந்த நேரத்தில் அதிவேகத்தில் செல்லும்.

    டேஸ் ஸ்கூட்டரின் கிராஃபிக்ஸ் இளைஞர்களை கவரும் வகையில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் டி.வி.எஸ். நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மற்றும் ஸ்கூட்டி செஸ்ட் மாடல்கள் அதிகம் விற்பனையாகி வரும் நிலையில், புதிய ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய மற்றும் ஓர் ஆப்ஷனை வழங்கும் படி இருக்கும். புதிய டேஸ் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.வி.எஸ். நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கூட்டர் பிரிவு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிவி.எஸ். புதுவரவு ஸ்கூட்டர் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோன்டா கிரேசியா ஸ்கூட்டருக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×