புதுடெல்லி:
இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் AH2 என்ற குறியீட்டு பெயரில் சிறிய கார் உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து ஹூன்டாய் சிறிய கார் மறைக்கப்பட்ட நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன.
ஹூன்டாய் நிறுவனம் தனது சான்ட்ரோ மாடலை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சிறிய கார் சோதனை இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. தமிழக பதிவு எண் கொண்டிருக்கும் நிலையில், கார் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறது.
முழுமையாக மறைக்கப்பட்டிருந்தாலும் காரின் சில தகவல்கள் தெரியவந்துள்ள. அதன்படி டெயில் லைட் கிளஸ்டர், ஸ்டாப் லைட், பின்புற விண்ட்ஷீல்டு வைப்பர், பிளாஸ்டிக் வீல் கவர் மற்றும் பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட பதிவு பலகை உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

புதிய சான்ட்ரோ தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த மாடல் 2018-ம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படம் ஹூன்டாய் சிறிய காரின் டாப் எண்ட் மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்புறம் காற்றோட்ட வசதிக்காக பெரிய கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.
முன்பக்க சான்ட்ரோ மாடலில் கேஸ்கேடு கிரில், கூர்மையான ஹெட்லேம்ப், பகலில் எரியும் எல்இடி, அழகிய பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படலாம். பின்பிற சான்ட்ரோ மாடல் பார்க்க ஹூன்டாய் கிரான்ட் i10 போன்று காட்சியளிக்கிறது. புதிய மாடல் சார்ந்து மற்ற விவரங்கள் அறியப்படவில்லை.
எனினும் புதிய சான்ட்ரோ மாடலில் 800சிசி அல்லது 1-லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இதே போன்ற இன்ஜின் ஹூன்டாய் i10 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கலாம் என்றும் AMT வேரியண்ட் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்ப்படுகிறது.