search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் வெளியாகும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X
    X

    விரைவில் வெளியாகும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X

    ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X மோட்டார்சைக்கிள் விற்பனையாளரின் கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X மாடல் விற்பனையாளரின் கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X ஸ்போர்ட் தோற்றம் கொண்டுள்ளது.

    தண்டர்போர்டு 500 மாடலுடன் ஒப்பிடும் போது தண்டர்பேர்டு 500X மாடலில் புதி்ய ஹேண்டிள்பார், ஒற்றை சீட், கருப்பு நிற அலாய் வீல், டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் மற்றும் எக்சாஸ்ட் மேட் பிளாக் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X பிரகாச நிறங்களில் பெயின்ட் செய்யப்பட்டு அவை ரிம் ஸ்டிரைப்களுடன் பொருந்துகிறது. ராயல் என்ஃபீல்டு மாடல்களில் கட்டாயம் வழங்கப்பட்டு வந்த பின்புற பேக்ரெஸ்ட் நீக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புதிய ராயல் என்ஃபீல்டு ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருப்பதால் இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது.

    தற்போதைய தண்டர்பேர்டு 500 மாடலில் வழங்கப்பட்ட இன்ஜின் புதிய தண்டர்பேர்டு 500X மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தண்டர்பேர்டு 500 மாடலில் 499சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 27.2 பி.எஸ். மற்றும் 41.3 என்.எம். டார்கியூ கொண்டிருக்கிறது.

    499சிசி இன்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருப்பதோடு ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டி.ஆர்.எல். மற்றும் எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 500X மாடலின் விற்பனை ஜனவரி 2018-இல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×