இரட்டை இலைக்கு லஞ்சம்: தினகரன் 21-ந்தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக டி.டி.வி.தினகரன் 21-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: தினகரன் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் உள்ளிட்ட 9 பேர் மீது துணை குற்றப்பத்திரிகை டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கொடி விவகாரத்தில் தினகரன் மீது சட்டரீதியான நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. கொடி விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
இரட்டை இலை விவகாரம்: டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் மேல்முறையீடு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இரட்டை இலை விவகாரம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். தனித்தனியே கேவியட் மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று தனித்தனியே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல்: தங்க தமிழ்ச்செல்வன்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
அ.தி.மு.க.வுக்கு இனி அனைத்து தேர்தலிலும் வெற்றி கிடைக்கும்: குமரகுரு எம்.எல்.ஏ. பேட்டி

இரட்டை இலை சின்னம் கிடைத்ததால் அ.தி.மு.க.வுக்கு இனி அனைத்து தேர்தலிலும் வெற்றி கிடைக்கும் என்று குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார்.
98 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களிடம் இருப்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது: அமைச்சர் பேட்டி

இரட்டை இலை சின்னம் கிடைத்து இருப்பதன் மூலம் 98 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பேட்டி

உச்சநீதிமன்றம் சென்று சட்டப்படி இரட்டை இலையை மீட்டெடுப்போம் என்று திருப்பூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசினார்.
அ.தி.மு.க. சட்ட விதிகளை சரியாக ஆய்வு செய்யவில்லை: தேர்தல் கமிஷன் மீது தி.மு.க. புகார்

இரட்டை இலை தீர்ப்பை கூறுவதற்கு முன்பு அ.தி.மு.க. சட்ட விதிகளை தேர்தல் கமிஷன் சரியாக ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக டிடிவி தரப்பினர் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக தகவல் வெளியானதால், ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம்: தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன்

அ.தி.மு.க. கொடியை நாங்களும் பயன்படுத்துவோம். ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் ‘தொப்பி’ சின்னத்தில் போட்டியிடுவோம் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
தினகரனின் பகல் கனவு பலிக்காமல் போய் விட்டது: வைத்திலிங்கம் எம்.பி.

டி.டி.வி. தினகரனின் பகல் கனவுகள் எல்லாம் பலிக்காமல் போய் விட்டது என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
எங்கள் வெற்றியின் பின்னணியில் பா.ஜனதா இல்லை: ஓ.பன்னீர்செல்வம்

எங்கள் வெற்றியின் பின்னணியில் பா.ஜனதா இல்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
டி.டி.வி.தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன்?

இரட்டை இலை பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது ஏன்? என்பது குறித்து போலீசார் விளக்கம் தர டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணைய உத்தரவின் முக்கிய அம்சங்கள்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இணைந்து செப்டம்பர் மாதம் கூட்டிய பொதுக்குழுவில் எந்த விதிமீறலும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்த ஒருங்கிணைந்த அணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி டெல்லியில் கைது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: தினகரன் நம்பிக்கை

அ.தி.மு.க. சட்ட விதிகளின் படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை யாருக்கு?: ஓரிரு நாட்களில் தீர்ப்பு வழங்க தேர்தல் கமிஷன் தயார்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக அ.தி.மு.க. இரு அணிகள் தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் விசாரணை தகவல்களை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு முடிந்த நிலையில் தீர்ப்பை வெளியிட அதிகாரிகள் தயாராகி உள்ளனர்.
இரட்டை இலை விவகாரம்: சசிகலா அணி தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சசிகலா அணி தரப்பில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் டெல்லி தலைமை தேர்தல் கமிஷனில் நேற்று எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தனர்.