குரூப்-2 தேர்விலும் மோசடி: 4 அரசு அதிகாரிகள் கைதாகிறார்கள்

ஓம்காந்தன், ஜெயக்குமார் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு மையத்தை தேர்வு செய்து குரூப்-2 தேர்விலும் மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 35 பேருக்கு சம்மன்- நேரில் அழைத்து விசாரிக்க முடிவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் சிக்கியுள்ள அதிகாரிகளையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசர் முடிவு செய்துள்ளனர்.
இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தனுக்கு 5 நாள் போலீஸ் காவல்

வி.ஏ.ஓ. தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
டிஎன்பிஎஸ்சி ஊழியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கிய ஊழியர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு: விடைத்தாள்களை திருத்தியது எப்படி?- ஜெயக்குமார் வாக்குமூலம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் விடைத்தாள்களை திருத்தியது எப்படி? என்பது பற்றி ஜெயக்குமார் மீண்டும் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: ஜெயக்குமார்-ஓம்காந்தனை 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் கைதான ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனை 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- சிபிஐ பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோருவது குறித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் மேலும் ஒருவர் சிக்கினார்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் மேலும் ஒருவரை போலீசார் இன்று பிடித்துள்ளனர். ஜெயக்குமாரின் கூட்டாளியான இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் அவர்கள் நாளை கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - முதல்வர் பழனிச்சாமி உறுதி

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
குரூப்-1 தேர்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி திமுக வழக்கு

குரூப்-1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட அழியும் மை கொண்ட பேனாவை தயாரித்து வழங்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அதிரடி மாற்றங்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்துவர, அதிநவீன தொழில்நுட்ப ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயக்குமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரின் கூட்டாளி செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.
குரூப்-4 தேர்வு முறைகேடு- செஞ்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கைது

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக செஞ்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது

குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குரூப்-4 தேர்வு முறைகேடு: டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனின் நண்பர் சிக்கினார்

எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து ஓம்காந்தனின் நண்பரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விடைத்தாள்களை திருத்தம் செய்ய ஜெயக்குமாருக்கு உதவி செய்த 3 டிரைவர்கள் சிக்கினர்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடைத்தாள்களை திருத்தம் செய்ய தரகர் ஜெயக்குமாருக்கு உதவி செய்த 3 டிரைவர்கள் சிக்கி உள்ளனர். தேர்வு முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இடைத்தரகர் ஜெயக்குமார் 10 ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலம்

டி.என்.பி.எஸ்.சி. வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் 10 ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. இதன் மூலம் அவர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளதும் தெரியவந்துள்ளது.