வேலூர் தொகுதியில் தேர்தல் - பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை

வேலூர் தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
புதிய எம்பிக்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் அளித்தார் தலைமை தேர்தல் ஆணையர்

பாராளுமன்ற தேர்தலில் வென்றவர்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா? - திக்விஜய் சிங் வேதனை

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி

தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனைவிட அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடும் இழுபறிக்கு பிறகு சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் கடும் இழுபறிக்கு பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்.
உ.பி.யின் அமேதியில் ஸ்மிருதி இரானி வெற்றி - ராகுல் தோல்வி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட கூடுதலாக 55 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி.
வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த ராகுலுக்கு நன்றி கூறிய மோடி

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
அபார வெற்றி பெற்ற மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி - மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை 26-ம் தேதி சந்திக்கிறார் மோடி- அடுத்த வாரம் பதவியேற்பு விழா

பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி மீண்டும் அடுத்தவாரம் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் வெற்றி உறுதியானது

கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இ.கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட சுமார் 8 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றிமுகம் காட்டி வருகிறார்.
வாரணாசியில் மோடி, காந்திநகரில் அமித் ஷா அதிக வாக்குகளில் முன்னிலை

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக தலைவர் அமித் ஷா காந்திநகர் தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.
வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி ராகுல்காந்தி ஒரு லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
பாஜக எம்.பி.க்கள் 25-ந்தேதி டெல்லிக்கு வர உத்தரவு

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதியிலும் முன்னணி

கேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே 20 தொகுதியிலும் முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்கு பின்னடைவு- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியை பின்னுக்குத் தள்ளி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால், ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணி முந்துகிறது- முன்னிலை பெற்ற முக்கிய வேட்பாளர்கள்

பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம்.
அமேதி தொகுதியில் ராகுல் பின்னடைவு- மோடி, அமித் ஷா முன்னிலை

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலையில் உள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்- பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.
நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்

பாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.