search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் திட்டம்.
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம், பிக்சல் மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்க வலியுறுத்தி இருக்கிறது. முடிந்தவரையில், அடுத்த காலாண்டிற்குள் பிக்சல் மாடல்களின் உற்பத்தியை துவங்க கூகுள் நிறுவனம் உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு மட்டும் 10 மில்லியன் பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிக்சல் 8 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் உற்பத்தி இந்தியாவில் துவங்கும் என்றும் இவை 2023 முதல் கிடைக்கும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்து இருந்தது.

     


    இவ்வாறு செய்வதன் மூலம் கூகுள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை சீனா மட்டுமின்றி இதர சந்தைகளிலும் விரிவுப்படுத்த முடியும். வரும் வாரங்களில் டாப் என்ட் பிக்சல் 8 ப்ரோ மாடலை உற்பத்தி செய்வதற்கான ப்ரோடக்ஷன் லைனை உருவாக்கவும், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் உற்பத்தி பணிகளை துவக்கவும் கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

    • செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது.
    • பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களிலேயே ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் பேட்டரி ஆயுள் அதிகளவில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ஐபோன் 15 சீரிசில் உள்ள பேட்டரி திறன் அதன் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டுள்ளதை விட இருமடங்கு அதிகமுறை சார்ஜ் செய்யும் போதும் ஆயுளை தக்கவைத்துக் கொள்ளும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    புதிய ஐ.ஒ.எஸ். 17.4 அப்டேட் மூலம் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் அதன் செட்டிங்ஸ்-இல் போன் பேட்டரி ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை டிஸ்ப்ளே செய்கிறது. பேட்டரி மற்றும் செயல்திறன் தொடர்பான விவரங்களை ஆப்பிள் நிறுவனம் மாற்றியுள்ளது. இதில் ஐபோன் 15 சீரிஸ் பேட்டரி ஆயுள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

     


    "ஐபோன் 15 மாடல்களின் பேட்டரிகள் ஆயிரம் முறை சார்ஜ் செய்த பிறகும் 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது," என பேட்டரி குறித்த தரவுகளில் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 14 மாடல்களின் பேட்டரிகள் 500 முறை சார்ஜ் செய்த பிறகு 80 சதவீதம் திறனை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டன.

    குறிப்பிட்ட நிலைகளில் ஐபோன் 15 சீரிசை சார்ஜிங் மற்றும் பயன்பாடுகளின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. மேலும் ஐபோனின் பேட்டரி பாகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு சிஸ்டத்தை தொடர்ந்து மேம்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    • வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
    • சாதனத்தை ஒப்படைத்து அதற்கான பணத்தை திரும்ப பெறலாம்.

    ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி மாடலில் UFS 3.1 ரக ஸ்டோரேஜ் வழங்கியுள்ளதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் போது, இதில் UFS 4.0 ரக ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் அறிவித்து இருந்தது.

    இந்த விஷயம் அம்பலமானதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனினை வாங்கியவர்கள் மற்றும் முன்பதிவு செய்தவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு ஒன்பிளஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது.

     


    தற்போது, ஒன்பிளஸ் 12R மாடலின் 256 ஜி.பி. மெமரி மாடலை வாங்கியவர்கள் சாதனத்தை பயன்படுத்தியதில் திருப்தி அடையவில்லை எனில், மார்ச் 16-ம் தேதிக்குள் தங்களது சாதனத்தை ஒப்படைத்து அதற்கான பணத்தை திரும்ப பெறலாம் என்று ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. 

    • மலேசியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருந்தது.
    • விரைவில் மற்றொரு தரமான மிட் ரேன்ஜர் வருகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான டீசரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் தொடர்ச்சியாகவே ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுன்டில் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. டீசருடன் #OneMorePlus என்ற ஹேஷ்டேக் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் மற்றொரு தரமான மிட் ரேன்ஜர் வருகிறது என்பதை கூறும் வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால், ஸ்மார்ட்போனின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

     


    புதிய ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் ஒன்றும் ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதில் ஸ்மார்ட்போன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 12 அப்கிரேடுகள் வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் லெதர் டெக்ஸ்ச்சர் பேக் பேனல் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

    இது குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்றும் 50MP சோனி LYT600 பிரைமரி கேமரா, கூடுதலாக இரண்டு லென்ஸ்கள், டிமென்சிட்டி 7050 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் வகையில் புதிய அப்டேட் உருவாக்கப்பட்டுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க செய்யும் விதமாக புதிய அம்சம் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ (Spam) லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்கள் தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதனை எதிர்கொள்ளும் வகையிலும் பயனர்களுக்கு மெசேஜிங் அனுபவத்தில் அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் வகையிலும் இந்த அப்டேட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பயனர்களை ஏமாற்றும் தகவல்கள் அடங்கிய ஸ்பேம் மெசேஜ்கள் வாட்ஸ்அப்-இல் அதிகளவில் அனுப்பப்பட்டு வருவது பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில், பயனர்கள் இவற்றுக்கு லாக் ஸ்கிரீனில் இருந்தபடியே நடவடிக்கை எடுக்க செய்யும் விதமாக புதிய அம்சம் வழங்கப்படுகிறது.

     


    இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் மற்றும்ஓர் முயற்சியாக புதிய அம்சம் அமைந்துள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யாமல், நேரடியாக லாக் ஸ்கிரீனில் இருந்தபடி ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய முடியும். இதற்கு ஸ்பேம் நோட்டிஃபிகேஷனை அழுத்திப்பிடித்து பிறகு திரையில் தெரியும் பல்வேறு ஆப்ஷன்களில் பிளாக் செய்யக் கோரும் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

    ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்வதோடு அவற்றை ரிபோர்ட் செய்யும் ஆப்ஷனும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய வசதி தவிர பயனர்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- பிரைவசி -- பிளாக்டு கான்டாக்ட்ஸ் -- ஆட் போன்ற ஆப்ஷன்களுக்கு சென்று பிளாக் செய்ய வேண்டிய கான்டாக்ட்-ஐ சேர்க்க முடியும்.

    • காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஐபோன் 14 சீரிசின் மேம்பட்ட மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேண்ட், 48MP கேமரா, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 மாடல் தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும்.

     


    ஐபோன் 15 மாடலின் 128 ஜி.பி. மாடல் ரூ. 79 ஆயிரத்து 900-க்கும், 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் விலை முறையே ரூ. 89 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டன. ப்ளிப்கார்ட் காதலர் தின சலுகையாக இதன் பேஸ் மாடல் விலை ரூ. 66 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இது அதன் முந்தைய விலையை விட ரூ. 12 ஆயிரத்து 900 குறைவு ஆகும்.

    விலை குறைப்பு மட்டுமின்றி பேங்க் ஆஃப் பரோடா, சிட்டி, டி.பி.எஸ். மற்றும் எச்.எஸ்.பி.சி. கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் அல்லது ரூ. 1500 வரையிலான தள்ளுபடி பெற முடியும். ஹெச்.டி.எஃப்.சி. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஐபோன் 15 விலையை ரூ. 63 ஆயிரத்து 999 என மாற்றுகிறது.

    ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரத்து 300 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஐபோன் 15 மாடல் - கிரீன், புளூ, எல்லோ, பின்க் மற்றும் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    • கேலக்ஸி A சீரிஸ் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல் விலை இந்திய சந்தயில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A05s ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி A சீரிஸ் மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது கேலக்ஸி A05s மாடலின் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது விலை குறைப்பின் படி கேலக்ஸி A05s விலை ரூ. 12 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், லைட் கிரீன் மற்றும் லைட் வைலட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

     


    கேலக்ஸி A05s அம்சங்கள்:

    சாம்சங் கேலக்ஸி A05s மாடலில் 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் உள்ளது.
    • ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தான் ரியல்மி 12 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ரியல்மி 12 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸரும், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் மாட்ல்களில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5.0 ஒ.எஸ். மற்றும் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கின்றன. இந்த நிலையில், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் டிரான்ஸ்பேரன்ட் பேக் பேனல் கொண்ட மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

     

    ஐரோப்பாவுக்கான ரியல்மி தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ் வாங் இது தொடர்பான புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா பாகங்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. புதிய வெர்ஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், இது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    இந்திய சந்தையில் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் நேவிகேட்டர் பெய்க், சப்மரைன் புளூ மற்றும் எக்ஸ்புளோரர் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 33 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டைட்டானியம் பயன்படுத்தியது.
    • ஐபோன் 15 ப்ரோ சீரிசில் டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் அலுமினியத்திற்கு மாற்றாக டைட்டானியம் பயன்படுத்தி இருப்பதாக அறிவித்து இருந்தது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 ப்ரோ சீரிசில் ஆப்பிள் நிறுவனம் டைட்டானியம் பயன்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில், முன்னணி யூடியூபரான ஜாக் நெல்சன் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு பாகங்களையும் தனித்தனியாக பிரித்து, அதன் உறுதித்தன்மையை சோதனைக்கு உட்படுத்தினார். அதில், கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் குறைந்த தரம் கொண்ட டைட்டானியம் பயன்படுத்தி இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

     


    ஆப்பிள் தனது ஐபோன் 15 ப்ரோ சீரிசில் அதிக தரமுள்ள டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் டியர் டவுன் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் ஸ்மார்ட்போனின் ஃபிரேம் XRF ஸ்கேன் செய்யப்பட்டதும், அதில் சாம்சங் நிறுவனம் இரண்டாம் தர டைட்டானியத்தை பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.

    ஆப்பிள் தனது ஐபோன்களில் பயன்படுத்தி இருக்கும் டைட்டானியத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ. 800-இல் துவங்கி ரூ. 1200 வரை இருக்கலாம். சாம்சங் தனது கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் டைட்டானியத்தின் விலை ரூ. 250-இல் துவங்கி ரூ. 400 வரை இருக்கலாம் என்று நெல்சன் தெரிவித்து இருக்கிறார்.

    • ஹானர் பிரான்டின் புதிய சாதனங்கள் உருவாகி இருக்கின்றன.
    • பல்வேறு பிரிவுகளில் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    ஹெச் டெக் நிறுவனம் தனது ஹானர் X9b ஸ்மார்ட்போனுடன் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 மற்றும் ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், புதிய சாதனங்கள் பிப்ரவரி 15-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    புதிய X சீரிஸ் அறிமுகத்தின் மூலம் ஹானர் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும் என்று தெரிவித்து இருக்கிறது. ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 மாடலில் சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும். இன்-இயர் டிசைன் கொண்டிருக்கும் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 30db வரை ANC, 35 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

     


    இந்த இயர்பட்ஸ்-ஐ ஹானர் ஏ.ஐ. ஸ்பேஸ் செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும். இது ஹானர் சாதனங்களிடையே ஒருமித்த கனெக்டிவிட்டியை வழங்கும் என்றும் நம்பத்தகுந்த அனுபவத்தை கொடுக்கும் என்றும் ஹானர் தெரிவித்துள்ளது. இந்த இயர்பட்ஸ் IP54 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கும் என்றும் குறைந்த எடை மற்றும் லோ லேடன்சி வசதிகளை கொண்டிருக்கிறது.

    ஹானர் சாய்ஸ் வாட்ச் 1.95 இன்ச் AMOLED மிக மெல்லிய டிஸ்ப்ளே, பில்ட்-இன் ஜி.பி.எஸ்., ஒற்றை க்ளிக் மூலம் SOS காலிங், நீண்ட நேர பேட்டரி பேக்கப் போன்ற வசதிகளை வழங்குகிறது. இத்துடன் ஹானர் ஹெல்த் ஆப் மூலம் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இதில் 5 ATM தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

    ஹானர் X9b போன்றே ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 மற்றும் ஹானர் சாய்ஸ் வாட்ச் உள்ளிட்டவை அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    • 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.
    • அசாத்திய கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தன் விஷன் ப்ரோ ஹெட்செட் ஒருவழியாக விற்பனைக்கு வந்தது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இதன் விற்பனை துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த ஹெட்செட்-க்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வந்தது. முன்பதிவின் போதே, இந்த ஹெட்செட்-ஐ வாங்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.

    புதிய ஹெட்செட் பயனர்கள் தொழில்நுட்பத்துடன் எப்படி உரையாடுகின்றனர் என்பதை மாற்றியமைக்கும் வகையில் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் முப்பரிமாண டிஜிட்டல் சூழலை நம் கண் முன்னே கொண்டுவருகிறது. இது தனித்துவம் மிக்க, அசாத்திய கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

     


    ஆப் ஸ்டோரில் பத்து லட்சத்திற்கும் அதிக செயலிகள் உள்ள நிலையில், புதிய ஏ.ஆர். / வி.ஆர். ஹெட்செட்-இல் பயன்படுத்துவதற்கென பிரத்யேகமாக 600 புதிய செயலிகள் மற்றும் கேம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய செயலிகள் ஆப்பிள் விஷன் ப்ரோ அம்சங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் விலை 3499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்து 415 என துவங்குகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இதன் விற்பனை துவங்கியுள்ள நிலையில், மற்ற நாடுகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.
    • மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் அடங்கும்.

    இந்தியாவில் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்வதற்காக முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.

    அந்த வரிசையில், தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி மொபைல் போன்களின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15-இல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    இதில் மொபைல் போன்களின் பேட்டரி கவர், முன்புற கவர், மிடில் கவர், மெயின் லென்ஸ், பேக் கவர், ஜி.எஸ்.எம். ஆன்டெனா, பி.யு. கேஸ், சீலிங் கேஸ்கெட், சிம் சாக்கெட், ஸ்கிரீயூ மற்றும் பிளாஸ்டிக், மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் என அனைத்தும் அடங்கும்.

    இறக்குமதி வரியை குறைக்க மொபைல் போன் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    ×