search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    • மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.
    • கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ்-உடன் அறிமுகம் செய்யப்படலாம்.

    சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனின் என்ட்ரி லெவல் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இதன் மூலம் சாம்சங் நிறுவனம் ஒரே ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கேலக்ஸி ஃபோல்டபில் சாதனத்தை அறிமுகம் செய்வது முதல் முறையாக இருக்கும். சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி / ஏற்றுமதி டேட்டாபேஸ்-இல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் Z ப்ளிப் 6 மாடல்களுடன் மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அதன்படி இரு மாடல்களின் குறியீட்டு பெயர் Q6 மற்றும் B6 என சூட்டப்பட்டுள்ளன. இவற்றுடன் Q6A என்ற குறியீட்டு பெயர் கொண்ட சாதனமும் இடம்பெற்று இருக்கிறது. இது சாம்சங்-இன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கப்பட்டு வரலாம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

    மேலும் இது சாம்சங்கின் முதல் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. உண்மையில் இத்தகைய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இது பற்றிய தகவல்கள் மட்டும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    • போட் ஏர்டோப்ஸ் 91 மாடலில் ENX தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • போட் ஏர்டோப்ஸ் 91 மாடல் அதிவேக சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏர்டோப்ஸ் 91 இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 45 மணி நேர பேட்டரி பேக்கப், குவிக் சார்ஜ் வசதி, 10mm டிரைவர், அதிகபட்சம் 50ms லோ லேடன்சி, ENX தொழில்நுட்பம் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் ஏர்டோப்ஸ் 91 மாடல் ஆக்டிவ் பிளாக், மிஸ்ட் கிரே மற்றும் ஸ்டாரி புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் போட் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.

     


    போட் ஏர்டோப்ஸ் 91 அம்சங்கள்:

    10mm ஆடியோ டிரைவர்கள்

    பீஸ்ட் மோட் மற்றும் லோ லேடன்சி வசதி

    டச் கண்ட்ரோல்

    டூயல் மைக் மற்றும் ENX தொழில்நுட்பம்

    ப்ளூடூத் 5.3

    அதிவேக கனெக்டிவிட்டிக்காக IWP (இன்ஸ்டா வேக் அன்ட் பேர்)

    வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி

    IPX4 ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட்

    அதிகபட்சம் 45 மணி நேர பிளேபேக்

    ASAP ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர்

    10 நிமிட சார்ஜில் 120 நிமிட பிளேபேக் கிடைக்கும்

    • புதிய சாதனத்தின் காப்புரிமை விவரங்கள் சமீபத்தில் வெளியானது.
    • தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று இருந்தது.

    சாம்சங் நிறுவனம் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்டென்ட் ஆகும் வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த சாதனத்தின் காப்புரிமை விவரங்கள் சமீபத்தில் வெளியானது.

    அதில் புதிய சாதனம் சதுரங்க வடிவம் கொண்டிருப்பதும், தானாக நீட்டித்துக் கொள்ளும் டிஸ்ப்ளே ஒன்றும் இடம்பெற்று இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே, சாதனத்தில் இருந்து நீளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சாம்சங் நிறுவனம் இரண்டு தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று இருந்தது.


     

    காப்புரிமைகளில் இரு தொழில்நுட்பங்களும்- ஃபிளெக்ஸ் மேஜிக் மற்றும் ஃபிளெக்ஸ் மேஜிக் பிக்சல் என்ற பெயர் கொண்டிருந்தன. இவை ஐரோப்பிய காப்புரிமை பதிவுக்கான தளம் மற்றும் ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. இந்த தொழில்நுட்பங்கள் "ஸ்மார்ட்போன்களுக்கான நீளும் ஸ்கிரீன்" என குறிப்பிடப்பட்டுள்ளன.

    அமெரிக்க காப்புரிமை வலைதளத்திலும் இதே போன்ற தொழில்நுட்பம் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இவற்றில் இத்தகைய தகவல் எதுவும் இடம்பெறவில்லை. காப்புரிமை தகவல்களின் படி புதிய டிஸ்ப்ளே பல்வித மூலைகளில் இருந்து நீட்டித்துக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. காப்புரிமையில் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்மார்ட்போன் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.

    எனினும், அதில் உள்ள தகவல்கள் இது அத்தகைய வடிவம் கொண்ட சாதனம் தான் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. இதுதவிர இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் டி.வி., ஏ.ஆர். எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்டவைகளிலும் பயன்படுத்த முடியும் என தெரிகிறது. புதிய சாதனம் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

    • புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படலாம்.
    • மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என தகவல்.

    ஆப்பிள் நிறுவனம் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.

    அந்த வகையில், மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட ஐபேட் ஏர், அளவில் பெரிய ஐபேட் ஏர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் மேக்புக் ஏர் மாடல் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் M3 பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

     


    புதிய ஐபேட் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களுடன் புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். 17.4 வெர்ஷனின் முதல் பீட்டாவில் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை ஐபேட் ப்ரோவில் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இத்துடன் ஃபேஸ் ஐ.டி. கேமராவும் வழங்கப்படுகிறது.

    2024 ஐபேட் மாடலில் புதிய OLED ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் இவற்றில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்கும் மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    • ஹானர் மேஜிக் V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யு.ஐ. 6.1 ஒ.எஸ். உள்ளது.

    ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாக புது சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஐரோப்பாவில் ஹானர் மேஜிக் V2 மாடல் இணைந்துள்ளது.

    கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான மேஜிக் V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் V2 மாடலில் 7.9 இன்ச் OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே, 5.45 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யு.ஐ. 6.1 ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் 4610 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஹானர் மேஜிக் V2 மாடல் பர்பில் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஐரோப்பிய சந்தையில் ஹானர் மேஜிக் V2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பர்பில் மற்றும் பிளாக் நிற வேரியன்ட்களின் விலை முறையே 1 ஆயிரத்து 699.99 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 585 மற்றும் 1 ஆயிரத்து 999 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 172 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • நத்திங் நிறுவனம் புதிய நெக்பேன்ட் இயர்போனை உருவாக்கி வருவதாக தகவல்.
    • இந்த மாடல் விவரங்கள் வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் TDRA வலைதளத்தில் நத்திங் (2a) ஸ்மார்ட்போன் விவரங்கள் சமீபத்தில் இடம்பெற்று இருந்தது. இதே வலைதளத்தில் தற்போது நத்திங் நெக்பேன்ட் ப்ரோ விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் இதே சாதனம் பற்றிய தகவல்கள் இந்தியாவின் BIS வலைதளத்திலும் இடம்பெற்றுள்ளது. நத்திங் நெக்பேன்ட் ப்ரோ மாடல் சி.எம்.எஃப். பிரான்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என BIS வலைதளத்தில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், புதிய நெக்பேன்ட் இயர்போன் நத்திங் நிறுவத்தின் சி.எம்.எஃப். பிரான்டு அறிமுகப்படுத்தும் இரண்டாவது ஆடியோ சாதனமாக இருக்கும்.

    முன்னதாக சி.எம்.எஃப். பட்ஸ் ப்ரோ மாடல் ஏற்கனவே அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நத்திங் நெக்பேன்ட் ப்ரோ மாடல் B164 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என TDRA வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இது நத்திங் நிறுவனத்தின் ஆடியோ சாதனம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய இயர்போன் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த இயர்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • ஒன்பிளஸ் பட்ஸ் 3 மாடலில் ANC வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய பட்ஸ் 3 மாடலில் IP55 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

    ஒன்பிளஸ் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் பட்ஸ் 3 சீரிஸ் இயர்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை இயர்பட்ஸ் ஆகும்.

    கிளாஸி ஃபினிஷ் டிசைன் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் 10.4mm வூஃபர், 6mm டுவீட்டர் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பட்ஸ் 3 அல்ட்ரா வைடு 15Hz முதல் 40KHz வரையிலான ஃபிரீக்வன்சியை வழங்குகிறது. இத்துடன் 49db வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இதை கொண்டு இரு நிலைகளில் ANC வசதியை பயன்படுத்தலாம்.

    இத்துடன் LHDC 5.0 ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட், டச் கண்ட்ரோல்கள், IP55 சான்று பெற்றிருக்கிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 44 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    ஒன்பிளஸ் பட்ஸ் 3 அம்சங்கள்:

    10.4mm பேஸ் டிரைவர், 6mm டுவீட்டர்

    AAC, SBC கோடெக்

    LHDC 5.0, ஹை-ரெஸ் ஆடியோ

    அதிகபட்சம் 1Mbps வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் ரேட்

    3 மைக்குகள்

    டச் கண்ட்ரோல் வசதி

    94ms லோ-லேடன்சி

    3 நிலைகளில் ANC வசதி

    3D சரவுன்ட் ஸ்பேஸ், டைனமிக் பேஸ் தொழில்நுட்பம்

    யு.எஸ்.பி. டைப் சி சப்போர்ட்

    பட்ஸ்- 58 எம்.ஏ.ஹெச். பேட்டரி, கேஸ்- 520 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ANC-யுடன் அதிபட்சம் 28 மணி நேர பேக்கப்

    ANC பயன்படுத்தாமல் அதிகபட்சம் 44 மணி நேர பேக்கப்

    ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி- 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 7 மணி நேர பேக்கப்

    ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடல் மெட்டாலிக் கிரே மற்றும் ஸ்பிலென்டிட் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 6-ம் தேதி துவங்குகிறது. 

    • ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனிற்கு ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.78 இன்ச் 1.5K AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கும் நான்கு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் அலர்ட் ஸ்லைடரும் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஒன்பிளஸ் 12R அம்சங்கள்:

    6.82 இன்ச் 2780x1264 பிக்சல் LTPO AMOLED டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 740 GPU

    8 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 14

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்ஃப்ரா-ரெட் சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    100 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் கூல் புளூ மற்றும் ஐயன் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 45 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஆஃப்லைனில் பிப்ரவரி 6-ம் தேதி துவங்குகிறது.

    • கேலக்ஸி ரிங் சாதனம் சில்வர் நிறம் கொண்டிருக்கும்.
    • பல்வேறு அளவுகளில் கிடைக்கும் என தகவல்.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரிங் பற்றிய டீசரை சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேலக்ஸி அன்பேக்டு 2024 நிகழ்வில் வெளியிட்டது. எனினும், இது பற்றிய விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. எனினும், இதில் உடல் ஆரோக்கியம் சார்ந்த ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான டீசரில் கேலக்ஸி ரிங் சாதனம் சில்வர் நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்தது.

    புதிய கேலக்ஸி ரிங் சாதனத்தை பயன்படுத்தியதாக டெக் துறையை சேர்ந்த கிரீன்கார்ட் தெரிவித்து இருக்கிறார். இந்த சாதனத்தை தன்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றும், சிறிது நேரம் அதை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

     

     

    அதன்படி கேலக்ஸி ரிங் சாதனம் மிக குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் இது பல்வேறு அளவுகளில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. புதிய சாதனம் அதிகபட்சம் மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சாம்சங் வெளியிட்ட டீசர் வீடியோவில் கேலகிஸி ரிங் சில்வர் நிறம் கொண்டிருந்தது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் கேலக்ஸி ரிங் விலை விவரங்கள் மற்றும் இதர அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. தற்போதைய தகவல்களின் படி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி ரிங் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். 

    • புது ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது.
    • இதில் பத்து கான்டாக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

    நுகர்வோர் மின்சாதன உற்பத்தியாளரான நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 600 நிட்ஸ் பிரைட்னஸ், ப்ளூடூத் காலிங், உடல் ஆரோக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் மாடல் அதிக உறுதியான உணர்வை வழங்குகிறது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி, இன்-பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது. பயனர்கள் இதில் பத்து கான்டாக்ட்களை சேமித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

     


    நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் ஸ்மார்ட்வாட்ச் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, அதிகபட்சம் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப், ப்ளூடூத் காலிங் வசதியை பயன்படுத்தும் போது ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    விலையை பொருத்தவரை நாய்ஸ் கலர்ஃபிட் க்ரோம் மாடல் ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் எலைட் மிட்நைட் கோல்டு, எலைட் பிளாக் மற்றும் எலைட் சில்வர் என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. 

    • விவரங்கள் பி.ஐ.எஸ். இந்தியா வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.
    • ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து புதிய மிட் ரேன்ஜ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வரிசையில், கேலக்ஸி F55 5ஜி, கேலக்ஸி M55 5ஜி மற்றும் கேலக்ஸி C55 5ஜி போன்ற மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. இவற்றில் கேலக்ஸி F55 5ஜி மாடல் விவரங்கள் பி.ஐ.எஸ். இந்தியா வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.

    புதிய கேலக்ஸி F55 5ஜி மாடல் SM-E556B எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. பி.ஐ.எஸ். வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் இடம்பெற்று இருக்காது. எனினும், இந்த வலைதளத்தில் இடம்பெறும் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்க முடியும்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    கடந்த வாரம் கேலக்ஸி F55 5ஜி மாடலின் விவரங்கள் வைபை அலையன்ஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. இத்துடன் கேலக்ஸி M55 5ஜி மற்றும் கேலக்ஸி C55 5ஜி மாடல்களும் இடம்பெற்று இருந்தன. கீக்பென்ச் விவரங்களின் படி கேலக்ஸி M55 5ஜி மாடலில் அட்ரினோ 644 GPU, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சி.பி.யு. வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி M54 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். கேலக்ஸி F55 5ஜி மாடல், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி F54 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 1380 பிராசஸர், அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. வரும் வாரங்களில் கேலக்ஸி F55 5ஜி மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

    • கண்காணிப்பு மற்றும் தகவல் பரிமாற்ற சேவையை வழங்கும்.
    • துல்லியமான எச்சரிக்கை தகவல்களை எழுப்பும்.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பாதுகாப்பு கேமராவை அறிமுகம் செய்தது. சியோமி 360 ஹோம் செக்யூரிட்டி கேமரா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய கேமரா கண்காணிப்பு மற்றும் தகவல் பரிமாற்ற சேவையை வழங்கும் என சியோமி தெரிவித்து இருக்கிறது.

    பெயருக்கு ஏற்றார்போல் புது கேமரா 360 டிகிரி பானரோமா வியூ மூலம் அறையின் ஒவ்வொரு மூலைகளிலும் துல்லியமாக பதிவு செய்யும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மனிதர்களை கண்டறியும் திறன் கொண்டுள்ளது. இதன் மூலம் அதிக துல்லியமான எச்சரிக்கை தகவல்களை இந்த கேமரா எழுப்பும்.

     


    இந்த கேமராவினை சியோமி ஹோம் ஆப் மூலம் கட்டுப்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் சியோமி 360 ஹோம் செக்யூரிட்டி கேமராவின் விலை ரூ. 3 ஆயிரத்து 200 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை எம்.ஐ. மற்றும் அமேசான், ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. விற்பனை ஜனவரி 22-ம் தேதி துவங்குகிறது.

    ×